பிரதமர் பொதுமக்களிடம் கோரிக்கை

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 ஒரு நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு மிக அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

இன்று (31) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அங்கு மஹாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் எமக்கு ஆதரவுகள் கிடைக்கின்றன. சட்டம், ஒழுங்கை மீறியவர்கள் தற்சமயம் வன்முறை செயற்பாடுகளிலிருந்து விலகி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட அத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களை முழுமையாக அகற்றி மீள கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியவை மீள் திருத்தப்பட்டு மீளவும் இயக்கச் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இது மிக குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.