ஒரு நிறுவனத்தில் கடன் இல்லையென்றாலே அது நல்ல முறையில் இயங்கி வருவதோடு, அது எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யவும் உதவிகரமாக இருக்கும்.
இதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் எதிர்காலத்தில் நிச்சயம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக அதன் பங்குகள் வளர்ச்சியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. அப்படி சில பங்குகளைத் தான் தரகு நிறுவனம் வாங்க பரிந்துரை செய்துள்ளது. அது என்னென்ன பங்குகள்? இலக்கு விலை எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.
நகை வாங்க போறீங்களா.. இந்த 5 முக்கிய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு போங்க..!
என்ன நிறுவனங்கள்?
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
NOCIL லிமிடெட்
ஜீபிலியண்ட் ஃபுட் ஓர்க்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் கடனில்லா நிறுவனங்களாக உள்ளன. இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இலக்கு விலை
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உலக்கு விலை 1500 ரூபாயாக வைத்துள்ளது.
இதே NOCIL லிமிடெட் இலக்கு விலை 348 ரூபாயாக 348 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது.
இதே ஜூபிலண்ட் உணவின் பங்கு விலை 678 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
வாங்கலாம்
மேற்கண்ட பங்குகளை வரும் வாரத்தில் வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
NOCIL லிமிடெட் நிறுவனம் முதல் காலாண்டில் அதன் வருவாய் விகிதம் 47.7% அதிகரித்து, 509 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 16% அதிகரித்து, 15,251 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் எபிடா மார்ஜின் விகிதமும் 20% வளர்ச்சி கண்டுள்ளது. இதன் செயல்பாட்டு லாபம் 103 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
ஜுபிலண்ட் புட்
இதே ஜுபிலண்ட் புட் நிறுவனம் முதல் காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 41% வளர்ச்சியினை கண்டுள்ளது. அதன் வருவாய் விகிதம் 1240.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மார்ஜினில் சற்று தாக்கம் இருந்தாலும், எபிட்டா மார்ஜின் சற்று அதிகரித்துள்ளது. இது அதன் மூலதன்ச பொருள்கள் விலை அதிகரிப்பால் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த மூன்று ஆண்டுகளாக 44% ஏற்றம் கண்டுள்ளது. இது இன்னும் தொடர்ந்து நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் கிட்டதட்ட 18% அதிகரித்தும் 262.85 கோடி ரூபயாக அதிகரித்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
Brokerage firm recommend to buy 3 company shares without debt
Brokerage firm recommend to buy 3 company shares without debt/கடனில்லா இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. நல்ல ஏற்றம் காணலாம்..!