சென்னை: சென்னையில் இருந்து கணவருடன் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற புதுமணப் பெண் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சித்தூர் அருகே உள்ள கைலாச கோனே அருவிக்கு சென்னையை சேர்ந்த மதன் -தமிழ்ச்செல்வி கடந்த மாதம் சுற்றுலா சென்றனர். ஒரு மாதம் ஆகியும் தமிழ்ச்செல்வி வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழ்ச்செல்வியை காதலித்து திருமணம் செய்த மதனை பிடித்து போலீசார் விசாரித்த போது கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.