ஒரே குடும்பத்தில் 4 ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – யார் இவர்கள் தெரியுமா ..?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் 4 பேர் ஐஓஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் பாஸ் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவர் கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கிராம வங்கி அதிகாரியான அனில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரு பெண் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே கவனம் இருந்துள்ளது. எனவே, நல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க வைத்ததோடு மட்டுமல்லாது தனது பிள்ளைகள் நால்வரையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு என யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.

மூத்த மகன் யோகேஷ் மிஸ்ரா என்ஜினீயரிங் படித்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் ஆனார். இவரது தங்கை ஷாமா மிஸ்ரா தொடர்ந்து 3 முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். இருந்த போதிலும் தனது விடா முயற்சியால் 4-வது முறையாக எழுதிய தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். மற்றொரு தங்கையான மாதுரி மிஸ்ரா முதுகலை பட்டம் பெற்றவர்.

இவர் 2014-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு நடந்த தேர்வில் அனில் பிரசாத் மிஸ்ராவின் கடைசி மகனான லோகேஷ் மிஸ்ரா தேர்ச்சி அடைந்ததுடன் தேசிய அளவில் 44-வது இடத்தையும் பிடித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா. இவர் கிராமிய வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அனில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரு பெண் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே கவனம் இருந்துள்ளது. எனவே, நல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க வைத்ததோடு மட்டுமல்லாது தனது பிள்ளைகள் நால்வரையும் ஐஏஎஸ் தேர்வு என பிரபலமாக அழைக்கப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.

மூத்த மகன் யோகேஷ் மிஸ்ரா என்ஜினீயரிங் படித்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் ஆனார். இவரது தங்கை ஷாமா மிஸ்ரா தொடர்ந்து 3 முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவினார். இருந்த போதிலும் தனது விடா முயற்சியால் 4-வது முறையாக எழுதிய தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். மற்றொரு தங்கையான மாதுரி மிஸ்ரா முதுகலை பட்டம் பெற்றவர். இவர் 2014-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு நடந்த தேர்வில் அனில் பிரசாத் மிஸ்ராவின் கடைசி மகனான லோகேஷ் மிஸ்ரா தேர்ச்சி அடைந்ததுடன் தேசிய அளவில் 44-வது இடத்தையும் பிடித்தார்.

இது குறித்து பேசிய அப் பிள்ளைகளின் தந்தை அனில் மிஸ்ரா பேசுகையில் ” நான் இப்போது மகிழ்ச்சியுடனும் தலைநிமிர்ந்தும் நிற்கின்றேன். இதற்கு காரணம் என்னுடைய பிள்ளைகள் தான். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.