சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது குடும்பத்தினருடன் சீனிவாசன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, மாண்டூர் பாலாற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது, சதீஷின் மகள்களான வேதஸ்ரீயும் , சிவசங்கரியும் ஆழமான இடத்திற்கு சென்றுள்ளனர்.
நீச்சல் தெரியாததால் மூழ்கினர். இதனை கண்ட சீனிவாசன் அவர்களை காப்பாற்ற சென்றார் அப்போது அவரும் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் சிறுமிகளின் சடலத்தை மீட்டனர்.
மூழ்கிய சீனிவாசனை தேடி வருகின்றனர், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.