குழப்பம் தீரும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

அ.தி.மு.க.வின் மூத்தத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘கட்சியில் குழப்பம் நீங்கும்வரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், “அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித் தன்மைகள் உண்டு. தமிழ்நாட்டில் ஏழைகளுக்காக இருக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக.

மொழி, இன வேறுபாடு கிடையாது

இந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். அவர்களுக்கு சம உரிமை உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹீரா சந்த் மற்றும் டாக்டர் ஹண்டே ஆகிய இருவரும் இயக்கத்தில் மேல்வந்தனர். இந்தக் கட்சியில் மொழி, இன வேறுபாடு தலைவர் (எம்ஜிஆர்) காலத்தில் இருந்தே இல்லை” என்றார்.

தொடர்ந்து, ஒற்றை தலைமை குறித்து பேசுகையில், ஒற்றை தலைமை இரட்டை தலைமை முக்கியம் இல்லை. ஒற்றை தலைமையில் இருந்து என்ன சாதீத்தார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன, ஆனால் அதிமுகவுக்கு தனித்தன்மை உண்டு.

முப்பிறவி எடுத்த எம்ஜிஆர்

இந்தக் கட்சியில் கூலித் தொழிலாளிக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தபோது இதுதான் இயக்கத்தின் அடிப்படை” என்றார். எம்ஜிஆர் குறித்து பேசுகையில், ‘எம்ஜிஆர் மூன்று பிறவி எடுத்தவர். ஒன்று பிறக்கையில், இரண்டாம் பிறவி எம்ஆர் ராதா சுட்டப்போது, மூன்றாவது பிறவி நோய்வாய் பட்டபோது” என்றார்.

மேலும், ‘கட்சியின் பொதுச்செயலாளராக எம்ஜிஆர் காலத்தில் நாவலர், ராகவானந்தர், வஉ சண்முகம் என மற்ற தலைவர்கள் இருந்துள்ளார் என கூட்டிக் காட்டிய பண்ருட்டி ராமச்சந்திரன், மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதுதான் முக்கியம்’ என்றார்.

ஓபிஎஸ்- சசிகலா ஆதரவு யாருக்கு?
சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்து கேட்டபோது, நாடகம் முடியும் வரை காத்திருப்போம் என்பதுபோல் பதிலளித்தார். மேலும் தனது ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு வெளிப்படையான பதில் அளிப்பதை தவிர்த்த பண்ருட்டி ராமச்சந்திரன் தனது ஆதரவு கட்சியின் கொள்கைக்கு என்றார்.

மேலும், “அதிமுகவில் பாஜகவின் தலையீடு இல்லை” என்றார். தொடர்ந்து, ஓபிஎஸ் என்ன செய்து இருக்க வேண்டும் என்பதை அவரிடம்தான் சொல்ல வேண்டும், உங்களிடத்தில் அல்ல. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்களே என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் ஒன்றரை கோடியும் இல்லை, 3 கோடியும் இல்லை” என்றார்.

பொறுமை..

தொண்டர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘இந்த மேல்மட்ட பிரச்சினை முடிவுக்கு வரும்வரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்றார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துள்ளார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது வீட்டில் சந்தித்த சசிகலா, மூத்த அண்ணணை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.