அகமதாபாத்: இந்தியாவில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்கும் பெரியம்மை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், கால்நடை விற்பனை, சந்தைக்கு குஜராத் அரசு வரும் 21ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள கட்ச், ஜாம்நகர், தேவபூமி, துவாரகா, ராஜ்கோட், பாவ் நகர், ஜூனாகத் உள்பட 17 மாவட்டங்களிலும் இந்த நோய் பரவியுள்ளது. இதனால், 1,240 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.இது குறித்து மாநில கால்நடை துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் கூறுகையில், `கடந்த சனிக்கிழமை வரை 1,746 கிராமங்களில் உள்ள 50,328 கால்நடைகள் இந்நோயால் தாக்கப்பட்டுள்ளன. இதுவரை 5.74 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.