யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை

யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள் ஜேர்மனியைத் தோற்கடித்து, 1966க்குப் பிறகு சொந்த மண்ணில் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்தின் வெம்ப்லியில் 87,192 ரசிகர்கள் முன்னிலையில் குறித்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜேர்மனி அணியுடன் Sarina Wiegman தலைமையிலான இங்கிலாந்து அணி மோதியுள்ளது.

யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை | Euro Cup Final England Beat Germany

Ella Toone அடித்த கோல் இங்கிலாந்துக்கு இரண்டாவது பாதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, ஜேர்மனியின் Lina Magull அந்த கனவை அடித்து நொறுக்கினார்.

பின்னர் இரு அணிகளும் சம நிலையில் எட்டியதும், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட, இங்கிலாந்தின் Chloe Kelly வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை பரிசாக்கினார்.

யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை | Euro Cup Final England Beat Germany

1966க்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் பெண் சிங்கங்கள் யூரோ 2022 கிண்ணத்தை தட்டித்தூக்கி சாதித்துள்ளது.
முதல் ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற அதே அணியையே Sarina Wiegman இறுதிப் போட்டியிலும் களமிறக்கினார்.

யூரோ கிண்ணம் போட்டியில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் களம் கண்ட இங்கிலாந்து அணி முதல் 20 நிமிடங்கள் ஜேர்மனிக்கு தண்ணி காட்டியது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை | Euro Cup Final England Beat Germany

யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை | Euro Cup Final England Beat Germany

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.