வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இது 3வது தங்கப் பதக்கம்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார்.
‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
இது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 3வது தங்கம் ஆகும். முதல் தங்கத்தை மீராபாய் ஜானு பெற்றுத் தந்த நிலையில், 63 கிலோ எடைப் பிரிவு பளுதுாக்குதலில், இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 3வது நாள் முடிவில், இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement