கனடாவில் மனைவியை அடித்தே கொலை செய்த இந்தியர்: வெளியான புகைப்படம்


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்திய தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.
ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்த நிலையில், சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, அவரது கணவர் 48 வயதான இந்தர்ஜித் சாந்து என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் பதிந்துள்ளனர்.

கனடாவில் மனைவியை அடித்தே கொலை செய்த இந்தியர்: வெளியான புகைப்படம் | Domestic Violence Husband Charged Wife Death

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மரணமடைந்த கமால்ஜித் சாந்து என்பவருக்கு 16 மற்றும் 21 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர் எனவும், அவர்கள் தற்போது உறவினர்கள் அரவணைப்பில் உள்ளனர் எனவும் Abbotsford பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 88 பெண்கள் அல்லது பெண் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் குடும்ப வன்முறை மற்றும் ஆண்களே கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.