மது வாங்கி தராததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவர் அங்குள்ள மைதானத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது. அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை மர்ம் நபர்கள் அவரை அடித்து கொலை செய்ததை கண்டறிந்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் அவரது நண்பர்கள் தாக்கியது தெரியவந்தது.ரவியை தாக்கிய அவரது நண்பர்களான சவுகார்பேட்டையைச் சேர்ந்த காக்கா தீனா (23), திலீப் குமார் (21) மற்றும் ஒரு இளஞ்சிறார் என விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக தீனா, குமாரை கைது செய்த காவல்துறையியனர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் சவ ஊர்வலத்தின் போது மது வாங்கி தராததால் அவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் கொலை செய்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.