6 நாள் முடிவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எவ்வளவு? நேற்று மட்டும் இத்தனை கோடியா?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆறு நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை 1.50 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் போயுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளன.

முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் லட்சம் கோடி ஏலம் போன பிறகு அடுத்தடுத்த நாட்களில் ஒரு சில நூறு கோடிகள் மட்டுமே ஏலம் போனது என்பதும், நேற்று 6-வது நாளில் ரூ.163 கோடிக்கு ஏலம் போய் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று 7வது நாளாகவும் ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் இன்று எவ்வளவு கோடிக்கு ஏலம் போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்… 4வது நாளில் நடந்தது என்ன?

6வது நாளில் 5ஜி ஏலம்

6வது நாளில் 5ஜி ஏலம்

டெலிகாம் அலைக்கற்றை ஏலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளாக தொடர்ந்த நிலையில் நேற்றைய ஏலத்தின் தொகையையும் சேர்த்து மொத்த ஏலம் ரூ.1,50,130 கோடியைத் தொட்டது. நேற்று மட்டும் ரூ.163 கோடிக்கு 5ஜி ஸ்பெக்டரம் ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

37 சுற்றுகள்

37 சுற்றுகள்

நேற்றுடன் மொத்தம் 37வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று 38வது சுற்று முதல் ஏலம் விடப்படும். உத்திரப்பிரதேச கிழக்கு வட்டத்தில் 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஏலம் எடுக்க தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகமாகி கொண்டே உள்ளது. உபி பகுதியின் ஏலம் எடுத்ததால், எதிர்காலத்தில் அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்பதே இதற்கு காரணம்.

இன்று 38வது சுற்று
 

இன்று 38வது சுற்று

இன்று அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி திங்கள்கிழமை காலை 38வது சுற்றுடன் ஏலம் தொடங்கும் என்று தொலைத்தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஏலம் தொடங்கிய பிறகு, முதல் நாளில் ஏலத்தொகை ரூ.1.45லட்சம் கோடி குவிந்ததை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் குறைவான தொகைக்கே ஏலம் போயுள்ளது.

ஞாயிறு ஏலம் ஏன்?

ஞாயிறு ஏலம் ஏன்?

ஏலத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (டிஎஸ்பி) அரசாங்கத்திடம் ஞாயிறு அன்றும் ஏலம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் வரலாற்றில் முதன்முறையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏலம் நடத்தப்பட்டது.

ஜியோ-ஏர்டெல் கடும் போட்டி

ஜியோ-ஏர்டெல் கடும் போட்டி

கடந்த மூன்று நாட்களாக உபி கிழக்கு வட்டத்தில் 1800MHz அலைவரிசையை ஏலம் எடுக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 Spectrum auction, Finally touches Rs.1.50-lakh crore by end of day 6

5 Spectrum auction, Finally touches Rs.1.50-lakh crore by end of day 6! | 6 நாள் முடிவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எவ்வளவு? நேற்று மற்றும் இத்தனை கோடியா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.