Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 36.50 காசுகள் குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. அதே ரூ. 1,068. 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
கோவை- சேப்பாக் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிப்பு
டிஎன்பிஎல் இறுதிப்போட்டி கோவையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை இருந்த காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் 2022
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். உணவு, தங்குமிடங்கள் குறித்து, போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து நன்றாக விளையாடும்படி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.
பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் நடைபெறுகிறது. விளையாட்டு பிரிவுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகிற 7ஆம் தேதி வரை நடைபெறும்.
மும்பை பத்ரா சால் நில ஊழல் வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்தது.
பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர http://tnmedicalselection.org, http://thhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலம், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.