ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் முதல் தேதி என்பதை அடுத்து எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது
இந்த அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூபாய் 36.00 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. சிலிண்டர் முதல் வட்டி அதிகரிப்பு வரை.. பிரச்சனை?
சிலிண்டர் விலை குறைப்பு
நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 1 முதல் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலையை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் குறைப்பதாக அறிவித்தன. இதன்படி 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை ரூ.36.00 குறைத்துள்ளன.
19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்
இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.36.00 குறைந்துள்ளதால் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை இப்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்பட அனைத்து நகரங்களிலும் குறைக்கப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-சென்னையில் சிலிண்டர் விலை
டெல்லியில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.36.00 குறைக்கப்பட்ட பிறகு, சிலிண்டரின் விலை ரூ.1,976.50 என விற்பனையாகி வருகிறது. இதற்கு முன்பு ஒரு சிலிண்டர் விலை 2,012.50 ரூபாயாக இருந்தது. சென்னையில் மட்டும் ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைப்புக்கு பின் சிலிண்டர் ஒன்று ரூ.2,141 ஆக உள்ளது. இதற்கு முன்பு ஒரு சிலிண்டர் விலை ரூ.2,177.50 ஆக இருந்தது.
மும்பை-கொல்கத்தாவில் சிலிண்டரின் விலை
இன்றைய விலைக்குறைப்பு அறிவிப்புக்கு பின் கொல்கத்தாவில் சிலிண்டரின் விலை ரூ.2,095.50 ஆக உள்ளது. முன்னதாக கொல்கத்தாவில் சிலிண்டர் விலை 2,132 ரூபாயாக இருந்தது. அதேபோல் மும்பையில் சிலிண்டர் விலை ரூ.1,972.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன் சிலிண்டர் ரூ.1936.50 ஆக உள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டபோதிலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் ஏற்கனவே விற்பனையாகி வந்த ரூ.1,168.00 என்ற விலையில் தான் தொடர்ந்து வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது போல் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் இல்லத்தரசிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
LPG commercial cylinder prices slashed from today, lashed by Rs 36
LPG commercial cylinder prices slashed from today, lashed by Rs 36 | சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு…. ஆனால் இல்லத்தரசிகள் சோகம்!