ராம்நகர் : பெட் ஷீட், ஜட்டியின் எலாஸ்டிக்கை பிரித்து கயிறாக திரித்து சிறையிலிருந்து வெளியே வீசி, மொபைல் போன் பெற்ற மூன்று கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எவ்வளவு பாதுகாப்பு, கெடுபிடிகள் இருந்தாலும், வித்தியாசமாக யோசித்து, சிறைக்குள் போதை பொருள், மொபைல் போன்களை எடுத்து வந்து விடுகின்றனர்.பெங்களூரு – மைசூரு சாலையிலுள்ள ராம்நகர் டவுன் அருகில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள கைதிகள், மொபைல் போன் வைத்துள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரி அம்பரிஷ் பூஜாரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடந்த சோதனையில், சிறைச்சாலையில் உள்ள ஆறாவது கட்டடத்தில் இருந்து 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து விசாரித்த போது, பெட்ஷீட்டின் நுனியை கயிறாக திரித்து, ஜட்டியின் எலாஸ்டிக்கை தனியாக பிரித்து, இரண்டையும் சேர்த்து, சிறை காம்பவுண்டுக்கு வெளியே வீசுவர். வெளியே இருக்கும் கைதிகளின் கூட்டாளிகள், அதில் மொபைல் போன்களை கட்டி, மீண்டும் சிறைக்குள் வீசுவர். இந்த செயல்பாடுகள் அனைத்தும் அதிகாலையில்நடக்கிறது.மொபைல் போனை பதுக்கிய கைதிகள் அப்புநாயகா, நவீன் கான், கிரிஷ் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement