லண்டனில் வசித்த இலங்கை தமிழ்ப்பெண்ணுடன் நடந்த திருமணம்! தந்தை ஸ்தானத்தில் நடத்தி வைத்த சத்யராஜ்


மணிவண்ணன் எனும் மகா கலைஞனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் திரையுலகினரும் சரி, ரசிகர்களும் சரி மறந்துவிட முடியாது.

காலத்தால் அழிக்க முடியாத பல காவியங்களை உருவாக்கித் தந்த மணிவண்ணனுக்கு நேற்று (ஜூலை 31) பிறந்தநாள் ஆகும்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்ன பல அரசியல் நிகழ்வுகள் தற்போது நிஜ வாழ்க்கையில் நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்த மணிவண்ணன் கடைசி காலத்தில் தமிழ் தேசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்த அவர் ஈழத்தமிழர்கள் தொடர்பான போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார்.

லண்டனில் வசித்த இலங்கை தமிழ்ப்பெண்ணுடன் நடந்த திருமணம்! தந்தை ஸ்தானத்தில் நடத்தி வைத்த சத்யராஜ் | Actor Manivannan Birthday Great Artist Family

thehindu

இந்த சமயத்தில் மணிவண்ணன் எப்படி சொன்ன சொல்லை காப்பாற்றுபவராக இறுதிவரை இருந்தார் என்பதை
தெரிந்து கொள்ள ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்கிறோம்.

ஒரு சமயத்தில் ஈழத்துக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களில் மணிவண்ணன் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈழப்பெண்ணுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார்.

சொன்னதை செய்தும் காட்டினார் மணிவண்ணன்.
லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணான அபி-க்கு தனது மகனான நடிகர் ரகுவண்ணணை திருமணம் பேசி முடித்தார்.

லண்டனில் வசித்த இலங்கை தமிழ்ப்பெண்ணுடன் நடந்த திருமணம்! தந்தை ஸ்தானத்தில் நடத்தி வைத்த சத்யராஜ் | Actor Manivannan Birthday Great Artist Family

கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி திருமண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் அந்த ஜூன் மாதத்தில் தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார்.

மணிவண்ணன் மரணமடைந்த சில வாரங்களில் அவர் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார்.
இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது.

இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவண்ணன் – அபி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை மணிவண்ணனின் உயிர் நண்பரான சத்யராஜ் முன்னின்று நடத்தி வைத்தது அப்போது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.   

லண்டனில் வசித்த இலங்கை தமிழ்ப்பெண்ணுடன் நடந்த திருமணம்! தந்தை ஸ்தானத்தில் நடத்தி வைத்த சத்யராஜ் | Actor Manivannan Birthday Great Artist Family



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.