வெளிநாட்டில் அழகிய இளம்பெண்ணிடம் புலம்பெயர்ந்தவர் கூறிய ஒரு வார்த்தை… அடுத்து நடந்த பயங்கரம்


அழகிய இளம்பெண் ஒருவரிடம், ஏதாவது வியாபாரம் ஆனால் நன்றாயிருக்கும் என்ற எண்ணத்தில், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார் ஒரு வியாபாரி.

அப்புறம் ஏன் அப்படிச் சொன்னோம் என்று நினைத்து வருந்துவதற்குக் கூட அவர் உயிருடன் இல்லை…

நைஜீரியாவிலிருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவரான Alika Ogorchukwu(39) என்பவர், இத்தாலியில் தெருக்களில் வியாபாரம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அழகான இளம்பெண் ஒருவர் அவ்வழியே வர, அவரிடம் ஏதாவது விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கில், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்காக ஒரு கைக்குட்டை வாங்கலாமே.

வெளிநாட்டில் அழகிய இளம்பெண்ணிடம் புலம்பெயர்ந்தவர் கூறிய ஒரு வார்த்தை... அடுத்து நடந்த பயங்கரம் | Seller Beaten To Death

அல்லது ஒரு யூரோவாவது கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று அவர் கூற, அந்த இளம்பெண்ணின் காதலர் காதில் இந்த வார்த்தைகள் விழ, ஆத்திரமடைந்த அவர் ஒரு கட்டையை எடுத்து Alikaவைத் தாக்கியிருக்கிறார்.

அப்படியும் ஆத்திரம் அடங்காமல், Alikaவைத் தரையில் தள்ளிய அந்த நபர் அவர் மீது ஏறி அமர்ந்து அவரை பயங்கரமாகத் தாக்கியதில், Alika அங்கேயே உயிரை விட்டுவிட்டார்.

உடனே Alikaவின் மொபைலைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார் அந்த நபர். ஆனால், கமெராக்கள் உதவியுடன் அவரை பிடித்துவிட்டார்கள் பொலிசார்.

அவரது பெயர் Filippo Claudio Giuseppe Ferlazzo (32). அவர் ஒரு இத்தாலியர்.
இந்த பயங்கர சம்பவம் இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், Filippoவின் காதலி அழகாக இருப்பதாக Alika கூறியதால் அவர் ஆத்திரமடைந்ததாக தெரிவித்துள்ளார் புலம்பெயர்வோர் கூட்டமைப்பு ஒன்றை நடத்திவரும் Daniel Amanza என்பவர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.