10 வயதில் ஒரு குட்டி கோடீஸ்வரர்… பல கோடிக்கு அதிபதியான ஆச்சரியம்!

வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தால் கூட ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது பலருக்கு பெரும் கனவாக இருந்து வரும் நிலையில் பத்து வயதில் பல கோடிகளுக்கு அதிபதியாக ஒரு குட்டி கோடீஸ்வரர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

நைஜீரியாவை சேர்ந்த 10 வயது சிறுவர் பல கோடிக்கு அதிபதி ஆகி உள்ளார் என்பதும் 6 வயதிலேயே அவர் பங்களாக்கள் மற்றும் ஆடம்பர கார்களை வாங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

10 வயது சிறுவன் பல கோடிக்கு அதிபதி ஆகியது எப்படி? அவரது தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் யார் யார்? என்பதை தற்போது பார்ப்போம்.

டீ கடை முதல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வரை… ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிகதை!

10 வயதில் கோடீஸ்வரர்

10 வயதில் கோடீஸ்வரர்

நைஜீரியாவை சேர்ந்த இணையதள பிரபலமான இஸ்மாலியா முஸ்தபா என்பவரின் மகன்தான் மாம்ஃபா ஜூனியர். 10 வயதான இவர், உலகின் குட்டி பணக்காரராக கருதப்படுகிறார். உலகின் மிக இளைய கோடீஸ்வரராக கருதப்படும் இவர் தனது ஆறு வயதிலேயே முதல் மாளிகையை வாங்கி உள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி உயர்ந்த விலையுள்ள குஸ்ஸி , வெர்சேஸ் போன்ற ஆடைகளை தான் இவர் அணிவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

10 வயதில் மாளிகை

10 வயதில் மாளிகை

மாம்ஃபா ஜூனியரின் தந்தை இஸ்மாலியா முஸ்தபா தனது மகனுக்கு பத்து வயதாக இருக்கும் போதே விலை உயர்ந்த மாளிகையை பரிசாக அளித்தார். தனது மகனுடைய பிறந்தநாளுக்கு இந்த பரிசு என்று அவர் கூறியுள்ளார். ஒரு சொந்த வீடு வைத்திருப்பது என்பது ஒரு மனிதனுக்கு மிகச்சிறந்த உணர்வு என்றும் அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றும் பணம் எவ்வளவு தான் இருந்தாலும் சொந்த வீட்டு வாழ்க்கை என்பது ஒரு மிகவும் மகிழ்ச்சியான உணர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவேதான் எனது மகன் பத்து வயதில் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவருடைய பிறந்தநாளுக்கு இந்த மாளிகையை பரிசு அளித்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தங்கையும் கோடீஸ்வரி
 

தங்கையும் கோடீஸ்வரி

ஒரு மனிதருக்கு சொந்த வீடு இருந்து விட்டாலே அவருக்கு ஊக்கம் ஏற்பட்டு மென்மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாம்ஃபா ஜூனியர் என்ற கோடீஸ்வரருக்கு ஒரு தங்கையும் உள்ளார் என்பதும் அவரது பெயர்களிலும் வீடுகள் மற்றும் மாளிகைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் பிரபலம்

இன்ஸ்டாகிராமில் பிரபலம்

இஸ்மாலியா முஸ்தபா இன்ஸ்டாகிராமில் 25,000 ஃபாலோயர்களுடன் பிரபலமாக உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது ஆடம்பர வாழ்க்கை குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவார். சிவப்பு நிற லம்போர்கினி அவென்டடோர் கார் முன் போஸ் கொடுப்பது முதல் டிசைனர் ஆடைகளை அணிந்தபடி போஸ் கொடுப்பது வரை அவரது ஒவ்வொரு பதிவு வைரல் ஆகும்.

துபாயில் ஆடம்பர வீடுகள்

துபாயில் ஆடம்பர வீடுகள்

இஸ்மாலியா முஸ்தபா அவர்களுக்கு துபாயில் ஒருசில ஆடம்பர வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வெளியே மஞ்சள் நிற ஃபெராரி உட்பட பல ஆடம்பர கார்கள் எப்போதும் நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

மாம்ஃபா ஜூனியரின் ஆடம்பர வாழ்க்கை

மாம்ஃபா ஜூனியரின் ஆடம்பர வாழ்க்கை

தனது தந்தையை போலவே மாம்ஃபா ஜூனியர் விலையுயர்ந்த ரசனை கொண்டவர். அவரது ஆடம்பரமான செலவின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். அவர் லாகோஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தனது வீடுகளுக்கு செல்லும்போது பதிவு செய்யப்படும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு லைக்ஸ் குவியும். இவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராமில் ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக வைத்திருப்பதையும், ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதையும், ஹைப்பர் கார்களில் ஓட்டுவதையும் பார்க்கலாம்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

10 வயதில் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர் 10 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், நைஜீரியாவின் ஊழல் எதிர்ப்பு ஏஜென்சி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்தது. விசாரணைக்கு பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் £350,000 பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

World’s youngest billionaire’ who owned first mansion at age SIX and has a fleet of super cars

World’s youngest billionaire’ who owned first mansion at age SIX and has a fleet of supercars | 10 வயதில் ஒரு குட்டி கோடீஸ்வரர்… பல கோடிக்கு அதிபதியான ஆச்சரியம்!

Story first published: Monday, August 1, 2022, 11:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.