Jio 666 plan details 2022: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபெய்ட் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்போது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.200 வரை சேமிக்க முடியும்.
மேலதிக செய்தி:
உலகம் அழியும் முன் ‘கடைசி செல்ஃபிகள்’ எப்படி இருக்கும்? AI கணித்த கொடூரமான புகைப்படங்கள்!
ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம், 84 நாள்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் 84 நாள்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இது தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, ஜியோ சேவைகளுக்கான இலவச அணுகலும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் 200 ரூபாய் தள்ளுபடி
அமேசான் பே பேமெண்ட் தளம், ஜியோ ரீசார்ஜ்களில் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. எந்தவொரு புதிய பயனரும் Amazon Pay மூலம் இந்த ரீசார்ஜ் செய்தால் ரூ.200 வரை தள்ளுபடி கிடைக்கும்.
மேலதிக செய்தி:
Adani 5G: ஜியோ, ஏர்டெல்லை எதிர்கொள்ளுமா அதானி? 5ஜி ஏலம் சொல்வதென்ன?
இதனுடன், புதிய பயனர்களுக்கு ஜியோ ரீசார்ஜ் மூலம் ரூ.25 வரை கேஷ்பேக் கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகையைப் பெற Amazon Pay சில நிபந்தனைகளையும் கொண்டுள்ளது. இந்தச் சலுகையைப் பெறுவதற்கு முதலில் நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் ரூ.666 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
மேலதிக செய்தி:
PUBG போல, BGMI கேமுக்கும் ஆப்பு! ஏன்… எதற்காக… விளையாட வழி இருக்கா?
இந்த திட்டமானது 77 நாள்களுக்கு செல்லுபடியாகும். வரம்பற்ற அழைப்பு பலனும் கிடைக்கிறது. மேலும், பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.
இரு நிறுவன திட்டங்களின் பலன்கள் ஒரே அளவில் இருந்தாலும், ஜியோவின் வேலிடிட்டி அதிகமாக இருக்கிறது. எனவே, பயனர்கள் தங்களுக்குத் தேவையான திட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். திட்டங்களில் சில நேரம் நிறுவனம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், திட்ட விவரங்களை சரியாகப் படித்த பின் ரீசார்ஜ் செய்யுங்கள்.