பிரான்சில் தங்கள் நண்பர்கள் சிலரை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய தம்பதியர் நீச்சல் குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் 80 வயதுகளிலிருக்கும் அந்த பிரித்தானிய தம்பதியர், விடுமுறையில் தாங்கள் தங்கும் தெற்கு பிரான்சிலுள்ள Hérault என்ற இடத்தில் அமைந்திருக்கும் தங்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.
இரவு தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும் என அவர்கள் அழைத்ததைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவர்களுடைய வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.
விருந்துக்கு வந்தவர்கள் தம்பதியரை அழைத்தும் யாரும் வெளியே வராததால், அவர்கள் வீட்டுக்குள் சென்று தேட, கடைசியில் வீட்டின் பின்னாலுள்ள நீச்சல் குளத்தில் தம்பதியர் இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள் உடனடியாக பொலிசாருக்குத் தகவலளித்துள்ளனர்.
தம்பதியரில் ஒருவர் தண்ணீரில் மூழ்குவதைக் கண்டு, காப்பாற்றச் சென்ற மற்றவரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதும் பொலிசார், அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
svajunasdinda