டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை கைவிடுவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்ததை அடுத்து மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையை வெளியிடும் வரை பழைய கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என துணை முதலமைச்சரும், கலால் அமைச்சருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சில்லறை மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்த இருப்பதால் 468 தனியார் மதுக் கடைகளின் உரிமம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.