ரோஜா செய்த கின்னஸ் சாதனை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. ஒரு கட்டத்தில் ஆந்திர அரசியலில் தீவிரமாக இறங்கிய ரோஜா, தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வருகிறார். தான் அமைச்சரான பிறகு திருப்பதி ஏழுமலையான், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வந்தார் ரோஜா.
இந்நிலையில் நேற்று ரோஜாவை 3,000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ எடுக்கும் நிகழ்வு ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. ரோஜா மேடையில் ஏறியதும் தயாராக இருந்த 3000 போட்டோகிராபர்களும் அவரை ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்து உள்ளனர். இப்படி ஒரு நபரை ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுப்பது இதுதான் முதல் முறை என்பதால் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற இந்த சாதனைக்கான சான்றிதழை ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ஆன ரோஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.