சென்னைக்கு அருகே பரந்தூரில் 2 வது புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களாக தேர்வு செய்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.