இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’Ranil go home’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே “வீடு இல்லாத மனிதனை வீட்டிற்குச் செல்லச் சொல்வதில் அர்த்தமில்லை” எனக் கூறியுள்ளார்.
தம்மை வீட்டுக்குச் செல்லக் கோருவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், மாறாக எரிந்த தனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப போராட்டக்காரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை சீரமைக்க வேண்டும் அல்லது தனது வீட்டை திருப்பி கட்டித்தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே
நாட்டில் நிலவும் அமைதியின்மையால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தாமதமாவதாகவும், இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் வரை ஏனைய நாடுகள் நிதியுதவி வழங்க தயாராக இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் இலங்கையின் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்காது என்பதால், இலங்கை தனது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
கடந்த 9-ம் தேதியன்று நடைபெற்ற கலவரத்தில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து எரித்தனர். தொடர் போராட்டங்களையடுத்து கோத்தபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், கடந்த 21-ம் தேதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை அதிபராகப் பதவி ஏற்றார்.
மேலும் படிக்க | எனக்கு இருந்தது ஒரே வீடு தான்… கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ