செப்டம்பர் மாதம் முதல் உணவுப்பொருட்களுக்கு ’Best before’ திகதி கிடையாது… பிரித்தானிய பல்பொருள் அங்காடி முடிவு


செப்டம்பர் மாதம் முதல், உணவுப்பொருட்களின் பொட்டலங்கள் மீது, ’Best before’ திகதியிடப்போவதில்லை என பிரபல பிரித்தானிய பல்பொருள் அங்காடி ஒன்று முடிவு செய்துள்ளது.

பொதுவாக மக்கள் உணவுப்பொருட்கள் வாங்கும்போது அவை பிரெஷ்ஷாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.

ஆகவே, உணவுப்பொருட்கள் மீது, அவற்றை எந்த திகதி வரை பயன்படுத்தினால் பிரெஷ்ஷாக இருக்கும் என்பதைக் காட்டும் திகதி அச்சிடப்பட்டிருக்கும்.
ஆனால், உக்ரைன் போருக்குப் பின் அந்த நிலை பல நாடுகளில் மாறி வருகிறது.

காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கிய மக்கள், இப்போது குறைந்த விலையில் என்ன உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்று பார்த்து வாங்கத் துவங்கிவிட்டார்கள்.
இதற்கு அவுஸ்திரேலியா, கொரியா, சிங்கப்பூர் ஏன் பிரித்தானியா கூட விதிவிலக்கல்ல!

ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழலில், உணவுப்பொருட்கள் வீணாவதைத் தவிர்ப்பதற்காக Waitrose என்னும் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள், இனி உணவுப்பொருட்களின் பொட்டலங்கள் மீது Best before திகதியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளன.

செப்டம்பர் மாதம் முதல் உணவுப்பொருட்களுக்கு ’Best before’ திகதி கிடையாது... பிரித்தானிய பல்பொருள் அங்காடி முடிவு | Best Before Food Shoppers Uk

PC: PA Wire/PA Images

அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் 2022 முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வர உள்ளது.
Best before திகதி என்பது, உணவின் தரத்தைக் காட்டுவதற்காகத்தானேயொழிய, அதன் பாதுகாப்பு குறித்து தெரிவிப்பதற்காக அல்ல என்கிறது Waitrose பல்பொருள் அங்காடி.

அதே நேரத்தில், ’use by’ திகதி என்பது, எந்த திகதி வரை அந்த உணவுப்பொருளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதைக் காட்டுவதாகும். அந்த திகதி தாண்டி அந்த உணவுப்பொருளைப் பயன்படுத்தினால், அது food poisoning என்னும் பிரச்சினையை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.