India vs West Indies Live score Updates Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
முதலாவது ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 190 ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீசை 122 ரன்னில் சுருட்டியது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் அதே முனைப்புடன் செயல்பட காத்திருக்கிறது. அணியில் தொடக்க வீரர் ஸ்லாட் மிகவும் குழப்பத்தைக் கண்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கேப்டன் ரோகித்துடன் பண்ட் களமாடி இருந்தார். இம்முறை கேப்டனுடன் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார். ஆனால், அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது பெரும் ஏமாற்றம் அளித்தது.
இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பையை கருத்தில் கொண்டுள்ள இந்திய அணி நிர்வாகம் அணியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் சில மாற்றங்கள் அணிக்கு உத்வேகம் கொடுக்கின்றன. அணியில் தினேஷ் கார்த்திக்கின் வருகை கூடுதல் பலம் சேர்க்கிறது. முதலாவது ஆட்டத்தில் அவர் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 41 ரன்கள் எடுத்திருந்தார். 2022 ஆண்டில் 147.80 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 10 இன்னிங்ஸ்களில் 167 ரன்கள் குவித்து, ஒரு ஃபினிஷராக தனது ரோலில் ஜொலித்து வருகிறார்.
தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் (அகேல் ஹொசைன்) களமிறங்கியது. 4 ஓவர்களையும் முழுதுமாக வீசிய அவர் 1-14 என்று எடுத்தார். அதேவேளையில், இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடியது. ரவி பிஷ்னோய், ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். வேகப்பந்துவீச்சில் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அல்ஸாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் போன்றோர் ரன்களை வாரிக்கொடுத்தனர். எனவே, அந்த அணியின் பந்துவீச்சு வரிசையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை, முதலாவது ஆட்டத்தில் அடைந்த தோல்விக்காகவும், அவர்களின் முதல் வெற்றிக்காகவும் இன்றைய ஆட்டத்தில் கடுமையாக போராடுவார்கள். மேலும், தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். இந்திய அணியினர் அந்த திட்டங்களை முறியடித்து தொடரில் மேலும் முன்னேற முயலுவார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:-
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், அகேல் ஹோசைன், ஒடியன் ஸ்மித், கீமோ பால், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய், ஹேடன் வால்ஷ், டெவோன் கிங் தாமஸ், பிரான் , ரொமாரியோ ஷெப்பர்ட், டொமினிக் டிரேக்ஸ்
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், அக்சர் படேல், தீபக் ஹூடா , அவேஷ் கான், இஷான் கிஷன், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன்
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் விபரம் பின்வருமாறு:-
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஒடியன் ஸ்மித், கீமோ பால், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்.
India in West Indies, 5 T20I Series, 2022Warner Park, Basseterre, St Kitts 01 August 2022
West Indies
India
Match Yet To Begin ( Day – 2nd T20I ) Match begins at 20:00 IST (14:30 GMT)
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil