அலுவலகத்தில் பொதுவாக நமக்கு பிடிக்காத விஷயங்கள் நடந்தாலே அந்த கோபத்தினை யார் மீது காட்டுவது என்று தெரியாமல், கடைசியில் பலரும் குடும்ப உறுப்பினர்கள் காட்டுவர். இன்னும் சிலர் கையில் கிடைத்ததை தூக்கி போட்டு உடைப்பர். இப்படி ஒவ்வொருவரும் அந்த மாதிரியான சமயத்தில் செய்வதறியாது பல மோசமான செயல்களில் ஈடுபடுவதுண்டு.
அப்படி கனடாவில் ஒருவர் செய்த சம்பவம் இன்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது குறித்தாக வீடியோவும் வைரலாக பரவி வருகின்றது.
கனடாவில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கடும் கோபம் கொண்டவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்சியடைய வைத்துள்ளது என்றே கூறலாம்.
அரிசி விலை 30 சதவீதம் உயர்வு.. கதறும் மக்கள்..!
மோசமான தாக்கம்
பொதுவாக பணி நீக்கம் என்பதை பலரும் நேர்மறையாக எடுத்து கொண்டு அடுத்தது என்ன? என்று சென்றுவிடுவார்கள். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் அது, மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் தான் கனடா ஊழியரின் செய்கை. ஏனெனில் தாங்கள் திடீரென பணி நீக்கம் செய்வது, குடும்பத்தின் நிலை என்ன? என்பதை சில சமயங்களில் யாருக்கும் தெரியாமல் போய்விடுகின்றது.
சொகுசு வீடு
கனடாவின் கால்கரியில் உள்ள ஏரிக்கரையில் உள்ள சொகுசு வீடுகளில் ஒன்றை, புல்டோசர் மூலம் உடைக்க அந்த நபர் முயற்சி செய்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. 59 வயதுடைய அந்த வயதான நபர், அந்த வீட்டின் முன்னால் ஊழியர் என்று கூறப்படுகிறது.
அபராதம்
இது குறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பிறகே இவரின் கடும் செயல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த நபருக்கு 3200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும், அவருக்கு தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
வீடு இடிப்பு
பிரைட் மரைன் குழுமத்தியின் இரண்டாவது மாடிக் கட்டிடத்தினை இடிக்க முயன்ற அந்த நபரை, அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவினை வெளியிட்டவர், உங்களால் இதனை உருவாக்க முடியாது. பணி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தியடைந்த ஊழியர் ஒருவர், எங்கள் ஏரி இல்லத்திற்கு அருகில் உள்ள வீட்டினை உடைத்து அழித்தார் என பதிவிட்டுள்ளார்.
மில்லியன் டாலர் செலவாகும்
கிட்டதட்ட இந்த வீடு முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில் அதனை சரி செய்ய மில்லியன் டாலர்களுக்கு மேலாக செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் மோசமான பணக்காரன் என குறிப்பிட்டுள்ளார். சிலர் முட்டாள் என்று கூறுகின்றனர். எனினும் சிலர் ஊழியர்களுக்கு மரியாதை கொடுங்கள் என பதிவிட்டும் வருகின்றனர். மொத்ததில் பணி நீக்கம் செய்யப்படும் முன்பு நிறுவனமும், ஊழியர்களும் அதனை பொறுமையுடன் கையாள்வதே சிறந்தது.
EX employer tears: An employee demolishes a luxury home after being fired
EX employer tears: An employee demolishes a luxury home after being fired/பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்.. கடும் கோபத்தில் செய்த வேலையை பாருங்க.. நொந்துபோன முதலாளி!