பாலி தீவு: புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரியூட்டும் வினோத விழா!

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள பதங்பாய் துறைமுகத்தின் கடற்கரையோரத்தில், இறந்து புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழா கொண்டாடப்பட்டது.

இறந்தவர்கள் எரிக்கப்படும்போது அவர்களின் ஆன்மா விடுதலையடைவதாகவும், அதனால் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த சுழற்சியைத் தொடங்க முடியும் எனவும் நம்புகிறார்கள்

அந்தப் பகுதி மக்கள், புதைத்த சடலங்களை சிறிது காலத்துக்குப் பிறகு தோண்டியெடுத்து எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

தனித்தனியாக ஒவ்வொரு சடலமாக எரியூட்டினால் செலவு அதிகமாகும் என்பதால், சடலங்களை மொத்தமாக எரியூட்டுவதாகத் தெரிவிக்கிறார்கள் அந்த மக்கள்.

இந்த விழாவுக்காகவே சிலர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சடங்கை நிறைவேற்றாமல் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்து புதைக்கப்பட்ட 117 பேரின் சடலங்களைத் தோண்டி வெளியில் எடுத்தவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை காலை மதச் சடங்குகளை மேற்கொண்டனர்.

பின்னர், அந்தச் சடலங்களைக் கடலுக்கு நடுவில் இருக்கும் தகன மையத்துக்குச் சுமந்து சென்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற உறவினர்கள் அவர்களின் இறந்த குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் எடுத்துவந்து அதன் உள்ளே வைத்தனர்.

பின்னர் இறந்தவர்களை மனதில் நினைத்துக்கொண்டு அந்த சவப்பெட்டிகளுக்குத் தீ வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.