சென்னையை சேர்ந்த ராணுவ வீராங்கனை ஒருவர் தான் 27 ஆண்டுகளுக்கு முன் ராணுவப்பயிற்சி பெற்ற அதே இடத்தில் தன்னுடைய மகன் தற்போது பயிற்சி பெறுவதை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது என்பது பல இந்தியர்களுக்கு கனவாக இருந்து வரும் நிலையில் ராணுவத்தில் தாயும் மகனும் ஒரே இடத்தில் பயிற்சி பெறுவது என்பது மிகவும் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வாகும்.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீராங்கனை மேஜர் ஸ்மிதா சதுர்வேதி அவர்களின் மகன் அவர் பணியை தொடங்கிய அதே இடத்தில் பணியமர்த்தப்பட்ட பார்த்து பெருமை அடைந்துள்ளார்.
ரிஷி சுனக் எடுத்த கடைசி ஆயுதம்: பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்துவாரா?
மேஜர் ஸ்மிதா சதுர்வேதி
சென்னையை சேர்ந்த மேஜர் ஸ்மிதா சதுர்வேதி 27 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ பணியைத் தொடங்கிய அதே அகாடமியில் தனது மகன் பணியமர்த்தப்படுவதை பார்த்த பெருமைக்குரிய தருணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ கேடட் பயிற்சி நிறுவனம்
இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் சதுர்வேதி, சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் தனது மகனின் பாஸிங் அவுட் அணிவகுப்பை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார். அவரது மனதில் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்பு அவர் கேடட் பயிற்சி பெற்ற அதே நிறுவனம் தான் இது என்பது ஓடிக்கொண்டிருந்தது.
டுவிட்டரில் டிரெண்ட்
சென்னை ராணுவ கேடட் பயிற்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அம்மாவும் மகனும் ஒன்றாக கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. ஒரு ராணுவ அதிகாரிக்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தருணம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1995ல் நியமனம்
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1995ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மேஜர் ஸ்மிதா சதுர்வேதி சென்னை ராணுவ பயிற்சி அகாடமியில் பயிற்சிக்காக சேர்ந்தார். இங்கு பெற்ற பயிற்சி தான் அவரது படிப்படியான முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது. இன்று அதே அகாடமியில் தனது மகன் அதே முறையில் பணியமர்த்தப்படுவதை பார்த்து பெருமை அடைந்துள்ளார் என அந்த ட்விட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் 1995ஆம் ஆண்டு சென்னை பயிற்சி அகாடமியில் கேடட்டாக மேஜர் ஸ்மிதா சதுர்வேதியின் த்ரோபேக் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்
என்னை பொருத்தவரை இது மிகப்பெரிய விஷயம் என்றும், எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் இந்த ட்விட்டரில் உள்ள புகைப்படங்களை பார்த்து மேஜர் ஸ்மிதா சதுர்வதி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வெளியேறும் அனைத்து கேடட்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Mother-son commissioned from the same military academy 27 years apart
Mother-son commissioned from the same military academy 27 years apart | 27 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில்…. சென்னை ராணுவ வீராங்கனையின் நெகிழ்ச்சியான அனுபவம்!