பெண்கள் ‘அந்த’ நாட்களில் ஊறுகாய் தொடக் கூடாது; காரணம் இதுதான்! 

அந்த காலத்தில்  மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஊருகாய்யை தொடக்கூடது என்று வழக்கம் இருந்தது. இந்நிலையில் இன்றும் சில வீடுகளில் அந்த பழக்கம் பின்பற்றபடுகிறது.

உணவை புனிதமாக பார்ப்பதால், மாதவிடாய் காலங்களில் பெண்கள் உணவு பொருட்களை தொடக்கூடாது என்று கூறப்பட்டது. இது ஒரு பழைய வழக்கம் என்றாலும் இன்னும் பல வீடுகளில் இது பின்பற்றபடுகிறது. பாரம்பரியம் என்பது கேள்வி கேட்கப்படாமல் பின்பற்றுவது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் செயலாகவே இது பலரால் பார்க்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் துணி பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் தற்போது பேட், மென்சுரல் கப் போன்ற பல விஷயங்கள் மாறியிருக்கிறது. இதனால் பெண்கள் எதை தொட்டாலும் அது கெட்டுவிடும் என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது.

இந்நிலையில் ஈரப்பதம் உள்ள இடங்களில் ஊறுகாய் கெட்டுவிடும். சரியான முறையில் பதப்படுத்தாமல் இருந்தால் ஊறுகாய் கெட்டுபோகும். மேலும் ஊறுகாய் எடுக்கும்போது, தண்ணீர் துளிகள் உள்ள ஸ்பூன் பயன்படுத்துவதால், பூஞ்சை வந்துவிடும். மேலும் ஊறுகாய் தயாரிக்கும்போது அதில அதிக காரம் போட வேண்டும். மேலும் உப்பின் அளவும் ஊறுகாய் கெட்டுபோகாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சிறிதளவு வினிகர் சேர்த்தால், ஊறுகாய் கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.