30000 பேர் பணிநீக்கம்.. அச்சத்தில் இந்திய ஊழியர்கள்..!

உலக நாடுகளில் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்லும் வேளையில் வல்லரசு நாடுகள் அனைத்தும் அச்சத்திலேயே உள்ளது. இதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கத் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள, வேலையின்மை காரணமாக அரசிடம் உதவித் தொகை கோருவோர் எண்ணிக்கை 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..!

பொருளாதாரம் மந்த நிலை

பொருளாதாரம் மந்த நிலை

இதற்கிடையில் பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும் மற்றும் பணிநீக்கம் செய்வதாகவும் எச்சரித்துள்ளது. இது வேலைவாய்ப்பு சந்தைக்குப் பெரிய அளவில் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பேஸ்புக்

பேஸ்புக்

உதாரணமாகப் பேஸ்புக் ஜூன் காலாண்டின் மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட கையோடு, பல மேனேஜர்கள் தங்கள் அணியில் ஆட்குறைப்பு குறித்து எச்சரித்து மெமோ அனுப்பியது டெக் துறையில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

காயின்பேஸ்
 

காயின்பேஸ்

இந்த வருட துவக்கத்தில் கிரிப்டோகரன்சி சரிவை தொடர்ந்து காயின்பேஸ் நிறுவனம் தனது 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இதேபோல் டெஸ்லா நிறுவனம் சுமார் 200 க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட், மெட்டா, கூகுள் எனப் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு விகிதத்தில் குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டது.

30000 டெக் ஊழியர்கள்

30000 டெக் ஊழியர்கள்

இப்படி அமெரிக்காவில் சிறிய, பெரிய டெக் நிறுவனங்களில் மட்டும் சுமார் 30,000 க்கும் அதிகமான டெக் ஊழியர்களைப் பணியில் இருந்து ஜூலை மாதம் நீக்கியுள்ளதாகக் கிரன்ச்பேஸ் அறிவித்துள்ளது. பொருளாதாரச் சரிவு தொழில்நுட்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான ஊழியர்களுக்கான டிமாண்ட் இருந்தாலும், முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீட்டைப் பெற முடியாமல் போன காரணத்தால் அதிகளவிலான ஊழியர்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்திய டெக் சந்தை

இந்திய டெக் சந்தை

சர்வதேச சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய டெக் சந்தையைப் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை. இதேவேளையில் இன்றைய வர்த்தகச் சூழ்நிலையைப் பார்க்கும் போது 2000 மற்றும் 2008ல் ஏற்பட்ட பாதிப்பை இந்தியாவில் வர வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

டிசிஎஸ்,விப்ரோ, ஹெச்சிஎல் கொடுத்த முக்கிய அப்டேட்.. அட்ரிஷன், சம்பளம், WFH.. இதோ முக்கிய விவரங்கள்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Great Layoff: Over 30,000 tech employees lost their jobs as of July in USA

Great Layoff: Over 30,000 tech employees lost their jobs as of July in USA 30000 பேர் பணிநீக்கம்.. அச்சத்தில் இந்திய ஊழியர்கள்..!

Story first published: Monday, August 1, 2022, 18:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.