சென்னை ஆழ் கடலுக்குள் ஆட்டம்: செஸ் ஒலிம்பியாட் டுடே ஹைலைட்ஸ்

Chess Olympiad; today highlights Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28 ஆம் தேதி) தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமையன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை ஆழ் கடலுக்குள் செஸ் ஆட்டம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை கொண்டாடும் விதமாக, சென்னை நீலாங்கரையில் உள்ள கடல் பகுதியில் 60 அடி ஆழத்தில், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் தம்பி போல் உடையணிந்து செஸ் விளையாடி மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது விளையாட்டு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், இந்தியா 1 அணி – ஹங்கேரி அணியுடனும், இந்தியா 2 அணி எஸ்டோனியா அணியுடனும், இந்தியா 3 அணி ஜார்ஜியா அணியுடனும், மோதுகின்றன.

இந்தியா 1, 2, 3 அணிகளில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் பட்டியல் பின்வருமாறு:-

இந்தியா 1 அணி

கோனேரு ஹம்பி
ஹரிகா துரோனாவலி
ஆர். வைஷாலி
டானியா சச்தேவ்

இந்தியா 2 அணி

வந்திகா அகர்வால்,
பத்மினி ரௌட்
சௌமியா சுவாமிநாதன்
திவ்யா தேஷ்முக்

இந்தியா 3 அணி

ஈஷா கரவாடே
சாஹிதி வர்ஷினி
பிரத்யுஷா போடா
நந்திதா பிவி

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.