இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவின் மின்சார பகிர்மான துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டை இலக்க அளவில் உள்ளது என நரேந்திர மோடி மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..!
மின்சார பகிர்மானம்
இந்தியாவின் மின்சார பகிர்மானம் அதாவது டிஸ்ட்ரிபியூஷன் துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டை இலக்க அளவில் உள்ளது, ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்திலும் ஒற்றை இலக்கில் தான் உள்ளது என குறிப்பிட்டு மோடி பேசியுள்ளார்.
மின்சாரம் வீண்
அப்படியென்றால் அதிகளவிலான மின்சாரம் வருமானம் ஈட்ட முடியாமல் வீணாகிறது. இதுமட்டும் அல்லாமல் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ரூ.1 லட்சம் கோடி நிலுவை
இந்தியாவில் பல மாநிலத்தில் மின்சார வாரியம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலுவை தொகையை வைத்துள்ளது. இந்த தொகை மாநில அரசுகள் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாநில அரசு
இந்நிலையில் நிலுவை தொகை வைத்துள்ள அனைத்து மாநிலத்தின் மின்சார வாரியமும் விரைவில் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சரியாக பணம் செலுத்திய போதும் ஏன் மாநில அரசுகளின் நிலுவை தொகை ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது எனவும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
3 லட்சம் கோடி ரூபாய் உதவி
மேலும் இந்தியாவில் மின்சார பகிர்மானம் மற்றும் மின்சார துறையின் ஆப்ரேஷன்ஸ் திறன் மற்றும் நிதியியல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த 2021-22 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரையிலான நிதிஉதவியை மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
ஏலத்திற்கு வந்த ஹிட்லர் வாட்ச்.. வாங்கியது யார் தெரியுமா..?
Narendra Modi says many state govt owe over ₹1 lakh cr to power firms; request to pay dues
Narendra Modi says many state govt owe over ₹1 lakh cr to power firms; request to pay dues மாநிலங்களை எச்சரிக்கும் நரேந்திர மோடி.. மின்சார துறை நிலைமை ரொம்ப மோசம்..!