ஒரே பைக்கில் 2 நம்பர் மோசடி வாலிபர் கைது| Dinamalar

நந்தினி லே —- அவுட் : அபராதம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், ஒரே பைக்கின் முன்னும், பின்னும் வேறு வேறு நம்பர் பிளேட் பொருத்தி மோசடி செய்தவர், போலீசாரிடம் சிக்கினார்பெங்களூரு, நந்தினி லே —- அவுட்டின், கூலி நகர் மேம்பாலம் அருகில், ராஜாஜி நகர் போக்குவரத்து போலீஸ் நிலைய தலைமை ஏட்டு சையத் அகமது, இரண்டு நாட்களுக்கு முன், காலை 9:00 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணியாமல், ‘ராயல் என்பீல்டு பைக்’ ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்த முற்பட்டார். ஆனால் பைக்கிலிருந்தவர், நிறுத்தாமல் தப்பியோட முயற்சித்தார். இவ்வேளையில் பைக்கின் முன்னும், பின்னும் வேறு வேறு பதிவு எண் கொண்ட, நம்பர் பிளேட் பொருத்தப்பட்டது தெரிந்தது. அதன்பின் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது, அபராத மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

நந்தினி லே — அவுட்டின், விஜயானந்த நகரில் வசிக்கும் மரிகவுடா, 31, ‘ராயல் என்பீல்டு பைக்’ வைத்துள்ளார். இவர் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக, அபராதம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், முன்னும், பின்னும் வேறு வேறு நம்பர் பிளேட் பொருத்தி மோசடி செய்தது, விசாரணையில் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.