Chess Olympiad Day 4: பல்வேறு சவால்களைச் சந்தித்த இந்திய ஓப்பன் அணிகள் – யார், யாருக்கு வெற்றி?

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு நிறைய ட்விஸ்டுகள் காத்திருந்தன. அவற்றிலிருந்து சில ஹைலைட்ஸ்…

நிஹல் சரின்

* ஓப்பன் பிரிவின் முதல் அணி, நான்கு போர்டுகளிலும் டிரா செய்துவிட்டது. ரூக் & பான் எண்டிங்கில் ஆடிய பெண்டலா ஹரிகிருஷ்ணா, மொஸார்டு ஜூல்ஸ் போர்டில் டிராவைத் தவிர எதுவுமே இல்லை. விதித் குஜ்ராத்தி, அர்ஜுன் எரிகஸி போர்டுகளிலும் டிரா மட்டுமேதான் இருந்தது. SL நாராயணன் போர்டில் மட்டும்தான் கொஞ்சமேனும் நம்பிக்கை இருந்தது. ஏனெனில், மூன்று போர்டுகளில் டிரா என்னும் போது, நான்காவது போர்டில் வென்றிருந்தால் மேட்ச் புள்ளிகளான 2-ஐ பெற்று அடுத்த சுற்றுக்குக் கம்பீரமாக முன்னேறியிருக்கலாம். அதனால், எல்லோரின் கவனமும் அதில்தான் இருந்தது. ரூக் & பான் எண்டிங்கில் இருந்த SL நாராயணனும் டிரா என முடிவு செய்ய, முதல் அணி நான்கு போர்டுகளிலும் டிராவுடன் திருப்திப்பட்டுக்கொண்டது இந்தியா.

SL நாராயணன்

* ஓப்பன் பிரிவின் இரண்டாம் அணி மட்டுமே இன்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடியது. ரௌநக் சத்வானி தனக்கு எதிராக ஆடிய சோனிஸ் ஃபிரான்சிஸ்கோ பிஷப் & பான் எண்டிங்கில் முதலிலேயே டிரா செய்துவிட்டார். குயின், நைட் & பான் எண்டிங்கில் விளையாடிய பிரக்ஞானந்தாவும் அடுத்து டிரா செய்துவிட்டார். யாரேனும் ஒருவர் வென்றால் மட்டுமே, மேட்ச் புள்ளிகளான இரண்டு புள்ளிகள் கிடைக்கும் என்னும் நிலையில் எல்லா கவனமும் முதல் இரண்டு போர்டுகளில் ஆடிய குகேஷ் மீதும், நிஹல் சரின் மீதும் விழுந்தது. ஆட்டத்தின் 18வது மூவிலேயே பிஷப்பை வைத்து ரூக்கை அடித்து லீட் எடுத்தார் நிஹில். அதை இறுதிவரையில் அப்படியே தக்கவைத்து, ஆட்டத்தின் 51வது மூவில் அவரை எதிர்த்து ஆடிய மொரோனி லூக்கா ஜூனியரை வெற்றி பெற்றார். இரண்டாவது போர்டில் ஆட்ட நேரம் முடியும் வரை ஆடினார் குகேஷ். மூன்று பான் லீடுடன், செக் மேட்டுக்கு முந்தைய மூவ் வரை குகேஷின் ஆட்டம் நடந்தது. இறுதியாக குகேஷும், நிஹிலும் வெல்ல இரண்டாவது அணி மட்டும், இரண்டு வெற்றி இரண்டு டிரா என அசத்தலாக இன்றைய நாளை முடித்தது.

* ஓப்பன் பிரிவின் மூன்றாவது அணி, ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆடியது. ரூக் & பான் எண்டிங்கில் முதலில் சூர்ய ஷேகர் கங்குலி டிரா செய்துவிட்டார். பிஷப், ரூக், பான் எண்டிங்கில் விளையாடிய SP சேதுராமன், நைட், ரூக், பான் எண்டிங்கில் விளையாடிக்கொண்டிருந்த முரளி கார்த்திகேயனும் டிரா செய்துவிட மூன்று போர்டுகளும் டிரா என்றாகிவிட்டன. அபிஜித் குப்தாவும், அண்டன் குய்ஜாரோ டேவிட்டும் ஆடிய போர்டில் அண்டனுக்கு பாஸர் பான் அமைந்துவிட, வேறுவழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டார் அபிஜித் குப்தா. மூன்று டிரா, ஒரு தோல்வி என்கிற ரீதியில் மூன்றாவது அணி ஆட்டத்தை முடித்தது.

Chess Olympiad: FRANCE (FRA) VS INDIA (IND)

போட்டி முடிவுகள் (ஓப்பன்)

FRANCE (FRA) VS INDIA (IND)

ஜூல்ஸ் மொசார்டு (ஒயிட்) 1/2 ~ 1/2 பெண்டலா ஹரிகிருஷ்ணா (பிளாக்)

லாரெண்ட் ஃபிரெஸ்ஸினெட் (பிளாக்) 1/2 ~ 1/2 விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (ஒயிட்)

மாத்யூ கார்னெட் (ஒயிட்) 1/2 ~ 1/2 அர்ஜுன் எரிகஸி (பிளாக்)

மாக்ஸிம் லகார்டு (பிளாக்) 1/2 ~ 1/2 S.L. நாராயணன் (ஒயிட்)

Chess Olympiad: INDIA 3 (IND3) VS SPAIN (ESP)

INDIA 3 (IND3) VS SPAIN (ESP)

சூர்யா ஷேகர் கங்குலி (ஒயிட்) 1/2 ~ 1/2 அலெக்ஸல் ஷிரோவ் (பிளாக்)

SP சேதுராமன் (பிளாக்) 1/2 ~ 1/2 பிரான்ன்சிஸ்கோ வலிஜோ பொன்ஸ் (ஒயிட்)

அபிஜித் குப்தா (ஒயிட்) 0 ~ 1 டேவிட் அண்டன் குஜாரோ (பிளாக்)

முரளி கார்த்திகேயன் (பிளாக்) 1/2 ~ 1/2 ஜெய்மி சாண்டோஸ் லடாஸா (ஒயிட்)

Chess Olympiad: INDIA 2 (IND2) Vs ITALY (ITA)

INDIA 2 (IND2) Vs ITALY (ITA)

D குகேஷ் (ஒயிட்) 1 ~ 0 டேனியல் வொகாடுரோ (பிளாக்)

நிஹில் சரின் (பிளாக்) 1 ~ 0 லூகா ஜூனியர் மொரோனி (ஒயிட்)

R பிரக்னானந்தா (ஒயிட்) 1/2 ~ 1/2 லெரொன்ஸோ லொடிஸி (பிளாக்)

ரௌநக் சத்வானி (பிளாக்) 1/2 ~ 1/2 ஃபிரான்செஸ்கோ சோனிஸ் (ஒயிட்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.