தொடர் நஷ்டத்தில் சோமேட்டோ.. ஆனா ஒரு நல்ல விஷயமும் இருக்கு..!

ஆன்லைன் ஆப் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமான சோமேட்டோ ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் மீண்டும் பெரும் நஷ்டத்தினையே கண்டுள்ளது.

அதன் ஒருங்கிணைந்த நஷ்டம் 185.7 கோடி ரூபாயினை கண்டுள்ளது. இது நஷ்டம் கண்டுள்ளது என்றாலும், கடந்த ஆண்டினை காட்டிலும் நஷ்டம் குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் இதே காலாண்டில் நஷ்டம் 356.2 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நஷ்டம் குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் தொடர்ந்து நஷ்டத்திலேயே இருந்து வருவது கவனிக்கவேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்டம்ன்னா இது தான்.. 2வது முறையும் கொட்டிய பணமழை.. ரொம்ப ராசியான கடை போல..!

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

இதே கடந்த மார்ச் காலாண்டிலும் கூட இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் 359.7 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. நிபுணர்கள் சோமேட்டோவின் நஷ்டம் 315 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் கணித்திருந்தனர்.

செயல்பாட்டு வருவாய்

செயல்பாட்டு வருவாய்

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதம் 1413.9 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 67.44% அதிகரித்து, 844.4 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சந்தையில் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக எங்களின் கவனம் வருவாயினை அதிகரிப்பதில் இருந்து வருகின்றது.

வளர்ச்சியில் கவனம்
 

வளர்ச்சியில் கவனம்

நாங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வருகின்றோம். நீண்டகால வளர்ச்சியினை நோக்கி கவனம் செலுத்தி வருகின்றோம். லாபத்தினை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம் என சோமேட்டோவின் தலைமை செயல் அதிகாரியான திபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

தேவையின் பக்கம் தாக்கம் உள்ளது அதனை நிறுவனம் உணர்ந்து கொண்டுள்ளது. விலையும் சற்று அதிகரித்துள்ளது. இது எங்களது மார்ஜினில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக அதிகளவிலான எரிபொருல் செலவு, சம்பள செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பலவும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சராசரி பரிவர்த்தனை அதிகரிப்பு

சராசரி பரிவர்த்தனை அதிகரிப்பு

எப்படியிருப்பினும் சேமேட்டோவின் மாத சராசரி வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விகிதமானது, கடந்த ஆண்டினை காட்டிலும் 36& அதிகரித்துள்ளது. இதே மாத சராசரி ஆர்டர் விகிதமானது, கட்ந்த ஆண்டினை காட்டிலும் 10% அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

zomato announced consolidated loss narrows to Rs.186 crore

zomato announced consolidated loss narrows to Rs.186 crore/தொடர் நஷ்டத்தில் சோமேட்டோ.. ஆனால் ஒரு நல்ல விஷயமும் இருக்கு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.