India at CWG, Day 4 – LIVE: இந்தியாவுக்கு ஒன்பதாவது பதக்கம்! பளுதூக்குதலில் ஏழு பதக்கங்கள்!

Table tennis Men’s team: பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி!

நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா! தமிழ்நாட்டு வீரர்கள் சத்யனும் ஷரத்தும் அசத்தல்!

Swimming – Men’s 50m Backstroke: இறுதிப்போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தார் ஸ்ரீஹரி நடராஜ்!

இதற்குமுன் 100M இறுதிப்போட்டியில் ஏழாவது இடம் பிடித்திருந்தார்! பதக்கம் வெல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கண்களையும் அவர்மேல் திரும்பியுள்ளார் ஸ்ரீஹரி!

Boxing men’s 80kg – ஆஷிஷ் குமார் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்!

ஆஷிஷ் குமார்

இந்தியாவுக்கு ஒன்பதாவது பதக்கம்! பளுதூக்குதலில் ஏழாவது பதக்கம்!

ஹர்ஜிந்தர் கவுர்

Weightlifting – Women’s 71kg: ஹர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார்!

Badminton – Mixed team: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் வெள்ளி பதக்கம் உறுதியானது!

இந்திய அணி
இந்திய அணி
இந்திய அணி

சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி!

ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் லக்ஷ்யா சென் நேர் செட்களில் வெற்றி பெற்றார்!

Judo – Women’s 57 kg: சுச்சிக்கா தரியால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!

Men’s Judo 61 kg: ஜாஸ்லின் சிங் சைனி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!

Badminton – Mixed team: சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை!

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சிந்து 21-11,21-12 என்ற நேர் செட்களில் வெற்றி!

சிந்து

Badminton – Mixed team: சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை!

ஆண்கள் இரட்டையர் போட்டியில் சாத்விக் மற்றும் சிரக் வெற்றி!

Men’s Hockey: இந்தியா விளையாடிய இங்கிலாந்திற்கு எதிரான குரூப் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது!

இந்தியா vs இங்கிலாந்து

இந்தியாவுக்கு எட்டாவது பதக்கம். ஜூடோவில் இரண்டாவது பதக்கம்!

Judo – Men’s 60kg: வெண்கல பதக்கம் வென்றார் விஜய் குமார் யாதவ்!

விஜய் குமார் யாதவ்

Judo – Women’s 48kg – வெள்ளி பதக்கம் வென்றார் சுஷிலா தேவி!

2014 காமன்வெல்த் போட்டிகளிலும் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார் சுஷிலா தேவி!

சுஷிலா தேவி

Squash men’s singles: அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல்!

சவுரவ் கோஷல்

காலிறுதியில் ஸ்காட்லாந்து வீரர் கிரெக் லோபனை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சவுரவ்!

Squash Women’s Singles: ஜோஷ்னா சின்னப்பா காலிறுதியில் 0-3 என்ற கணக்கில் கனடாவின் ஹோல்லி நாட்டனிடம் தோல்வி!

Squash Women’s Singles

Squash Women’s Singles: காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா 0-3 என்ற கணக்கில் கனடாவின் ஹோல்லி நாட்டனிடம் தோல்வி!

Gymnastics Artistic Women’s Vault Finals: பிரணதி நாயக் ஐந்தாவது இடம் பிடித்தார்!

பிரணதி நாயக்

Boxing Men’s 54kg- 57kg – முஹம்மத் ஹூஸ்ஸாமுதின் காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

முஹம்மத் ஹூஸ்ஸாமுதின்

பங்களாதேஷ் வீரர் சலீமை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இவர் 2018ம் ஆண்டு காமன்வெல்த்தில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்!

Judo Men’s -60 kg: Repechage சுற்றில் விஜய் குமார் யாதவ் வெற்றி! வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்பார்!

விஜய் குமார் யாதவ்

Judo, Women -48 kg : ப்ரிஸ்கிலாவை வீழ்த்தி சுஷிலா தேவி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியானது!

சுஷிலா தேவி

Judo, women -57 kg: காலிறுதியில் சுச்சிக்கா தரியால் தோல்வி. ஆனால் Repechage முதல் சுற்றில் வெற்றி பெற்றதால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்பார்!

சுச்சிக்கா தரியால்

Squash Women’s Singles – Plate Quarter-Final: சுனைனா சாரா குருவில்லா இலங்கையின் சனித்மா சினலியை 11-3, 11-2, 11-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்! இதன்மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்!

Men’s Judo 61 kg: அரையிறுதியில் ஜாஸ்லின் சிங் சைனி தோல்வி. அடுத்து வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் நாத்தனை எதிர்கொள்கிறார்!

ஜாஸ்லின் சிங் சைனி

Boxing Men’s 51 kg: காலிறுதிக்கு தகுதி பெற்றார் அமீத் பன்கல்!

அமீத் பன்கல்

Judo, Men -60 kg: காலிறுதியில் விஜய் குமார் யாதவ் தோல்வி!

Judo – women’s 48 kg: அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் சுசிலா தேவி!

சுசிலா தேவி

Judo, Men -60 kg: விஜய் குமார் யாதவ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

விஜய் குமார் யாதவ்
Weightlifting Men’s 81kg – Final

Weightlifting Men’s 81kg – Final: அஜய் சிங் நான்காவது இடம் பிடித்தார்!

லான் பவுல்ஸில் பதக்கத்தை உறுதிசெய்த பெண்கள் அணி!

லான் பவுல்ஸ்

16-13 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய லான் பவுல்ஸ் பெண்கள் அணி!

Lawn Bowls, Women’s Fours:

இந்தியா vs நியூஸிலாந்து – 14 எண்டுகள் முடிவில் 12-13 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா பின்னடைவு!

ஜூடோவில் இந்தியாவின் பயணம் தொடங்கியது!

Men’s Judo 61 kg – முதல் போட்டியில் ஜாஸ்லின் சிங் சைனி வெற்றி!

Weightlifting Men’s 81kg – Final: Snatch சுற்று முடிவில் இந்திய வீரர் அஜய் சிங் மூன்றாவது இடம்!

Snatch சுற்று

Lawn Bowls, Women’s Fours: நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10-12 என்ற கணக்கில் பின்னடைவு!

இந்திய அணி

இன்று இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை!

தொடங்கியது காமன்வெல்த் போட்டிகளின் நான்காவது நாள்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.