பெங்களூரு : குரங்கு அம்மைக்கு கேரளாவில் ஒருவர் பலியானதை அடுத்து, கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டது. ஆனால், அவருக்கு ‘சின்னம்மை’ என்று ஆய்வில் தெரியவந்தது.
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இறந்த 22 வயது வாலிபரின் ரத்தமாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு குரங்கு அம்மை இருந்தது உறுதி நேற்று செய்யப்பட்டது.இது குறித்து தாவணகரேயில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:குரங்கு அம்மையை, நாங்கள் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம்.
நாளை (இன்று) சுகாதார அமைச்சர், சுகாதார துறை அதிகாரிகளுடன் முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.வெளிநாடு, வெளியூர்களில் இருந்து வரும் பயணியரை எவ்வாறு பரிசோதிப்பது, ஆய்வகங்கள் அமைப்பது மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement