பெங்களூரு மாநகராட்சியை பிடிக்க வியூகம்; பா.ஜ., தலைவர்கள் முக்கிய ஆலோசனை| Dinamalar

மல்லேஸ்வரம் : பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, மூத்த தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிகாலம் முடிந்து, 23 மாதங்கள் ஆகிறது. உச்சநீதிமன்ற உத்தரவால், விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான பணியில் கர்நாடக தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு தயராவது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில், பெங்களூரு மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், நகரின் மூன்று எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக, ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.பின், வருவாய் துறை அமைச்சர் அசோக், கூறியதாவது:பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஒரு வாரத்தில் பூத் மட்ட அளவில் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். வேட்பாளர்கள் தேர்வு பணி நடக்கும்.பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் உருவாக்க கட்சி பணியாற்றப்படும்.

பெங்களூரு வளர்ச்சிக்கு, முதல்வர் வழங்கிய 8,000 கோடி ரூபாய் திட்ட பணிகள் உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத பகுதிகளில், எம்.எல்.சி., – எம்.பி.,க்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்படும். மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி, மாநகராட்சியை கைப்பற்றும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.வார்டு வாரியாக இட ஒதுக்கீடு வழங்கும் பணியை, முதல்வரும், அதிகாரிகளும் செய்வர். அதன் பின், தேர்தல் கால அட்டவணை வெளியான உடன், வெற்றி வியூக பணிகள் செயல்படுத்தப்படும்.தேர்தல் என்பது போர் போன்றது.

எந்த தேர்தலாக இருந்தாலும் போர் போன்று நினைத்து தயாராக வேண்டும். பா.ஜ.,வுக்கு ஆதாரமே தொண்டர்கள் தான்.ஆம் ஆத்மியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது. இம்முறை பெங்களூரு மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றுவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.