காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் ஒன்பதாக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பிர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

latest tamil news


நான்காவாது நாளாக நடந்த விளையாட்டு போட்டியில் ஜூடோ ஆடவர் பிரிவில் விஜய் வெண்கலமும், ஜூடோ பெண்கள் பிரிவில் சுசீலா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். எடை தூக்கும் போட்டியில் 71 கிலோ ஆடவர் பிரிவில் கர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார்.

latest tamil news

இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளதால் இது வரை இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.