குற்றால அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வெள்ளப்பெருக்கின்போது குளிப்பது ஆபத்து என்பதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.