Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையா? ஜோதிமணி
பால் மீது 5% ஜிஎஸ்டி விதித்தால் எப்படி குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும்? பென்சிலுக்கு கூட வரி போடும் இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையா? பிறந்தது முதல் இறந்தது வரை வரி போடும் அரசு, பிரதமர் மோடியின் அரசாக மட்டுமே இருக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசினார்.
இந்தியா வேகமாக வளர்கிறது
கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கு இடமில்லை என மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
டி20 கிரிக்கெட்.. மே. இந்திய தீவுகள் அணி வெற்றி
இந்தியா- மே. இந்திய தீவுகள் இடையேயான, 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 19.4 ஓவர்கள் முடிவில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய மே. இந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹ்ரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்தார்
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 46,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டு அறை எண்களை அறிவித்தது. 1070 மற்றும் 0462-501012 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
டெல்லியில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 6 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி வரை அதி கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக குமரியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வால்பாறையிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானில் வெள்ள மீட்பு பணிக்காக, மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.