60 ஆண்டுகளுக்கு பின் முதல்முறை… இனி ஸ்ப்ரைட் என்ன கலர் தெரியுமா?

மக்களின் விருப்பத்திற்குரிய குளிர்பானங்களில் ஒன்று ஸ்ப்ரைட் என்பதும் இந்த குளிர்பானம் சிறுவர் முதல் முதியோர்கள் வரை மிகவும் விரும்பி குடிக்கக்கூடிய குளிர்பானமாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

கடந்த 60 ஆண்டுகளாக பச்சை நிற பாட்டிலில் இருந்த ஸ்ப்ரைட் குளிர்பானத்தின் பாட்டில் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ப்ரைட் என்றாலே அனைவர் மனதிலும் அதன் பச்சை நிற பாட்டில் பதிந்து இருக்கும் நிலையில் இந்த நிறமாற்றம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐடிஆர் தாக்கல்: ஜூலை 31ஆம் தேதியை தவறவிட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ப்ரைட் குளிர்பானம்

ஸ்ப்ரைட் குளிர்பானம்

60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ப்ரைட் பச்சை பாட்டிலாக இருந்த நிலையில் தற்போது அதன் நிறத்தை மாற்றி, நிலையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வெள்ளை பாட்டிலாக மாறுகிறது. ஸ்ப்ரைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கொக்க கோலா (Coco Cola) ஆகஸ்ட் 1 முதல் புதிய வெள்ளை நிற பாட்டில் வடிவமைப்பில் ஸ்ப்ரைட் வெளிவரும் என்று கூறியுள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாது

மறுசுழற்சி செய்ய முடியாது

ஸ்ப்ரைட் இதுவரை பச்சை நிற பாட்டிலில் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த பச்சை பாட்டில்கள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) என்ற மூலப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. இந்த பாட்டில்களை மீண்டும் மறுசுழற்சி செய்து பாட்டில்களாக மாற்ற முடியாது. அதற்கு பதிலாக தரைவிரிப்புகள் மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களாக மாற்றப்படுகிறது.

வெள்ளை பாட்டில் ஏன்?
 

வெள்ளை பாட்டில் ஏன்?

இந்த நிலையில் பச்சை நிற பாட்டில்களுக்கு பதிலாக வெள்ளை நிற பாட்டிலாக மாற்றினால் எளிதில் மறுசுழற்சி செய்து மீண்டும் பாட்டிலாகவே மாற்றிவிடலாம். ஸ்ப்ரைட் பாட்டில்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பாட்டில்களாக மாற்றுவதற்காக கோலா நிறுவனம் R3Cycle என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மறுசுழற்சி நிறுவனம்

மறுசுழற்சி நிறுவனம்

கோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள மறுசுழற்சி நிறுவனமான R3CYCLE நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியன் ஓச்சோவா அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘மறுசுழற்சி செய்யும் போது, ​​தெளிவான PET ஸ்ப்ரைட் பாட்டில்களை புதிய தெளிவான பாட்டில்களாக மாற்றலாம் என்று தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

ஸ்ப்ரைட் நிறுவனம் கடந்த 1961ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டதிலிருந்து பச்சை நிறத்தில் பேக்கேஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் கருத்துக்கணிப்பின்படி, ஸ்ப்ரைட் ஒரு சிறந்த விற்பனையான பானங்களில் ஒன்றாக இன்று வரை உள்ள நிலையில் பாட்டிலின் நிறம் மாறினாலும் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கும் என கருதப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகள்

ஸ்ப்ரைட் தவிர, கோலாவின் பாட்டில் தண்ணீர் பிராண்டான ‘தசானி’ 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது. இந்த மாற்றம் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்பிடுகையில் 20 மில்லியன் பவுண்டுகள் பிளாஸ்டிக் கழிவுகள் குறையும் என்று கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sprite changes colour of iconic green bottle to clear white after 60 years, here why

Sprite changes colour of iconic green bottle to clear white after 60 years, heres why |60 ஆண்டுகளுக்கு பின் முதல்முறை… இனி ஸ்ப்ரைட் என்ன கலர் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.