நிர்மலா சீதாராமன்-க்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணியன் சாமி..!

உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் பணவீக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறித்துக் கேள்விகளை எழுப்பியனர்.

இந்திய பொருளாதாரம் மந்தநிலை (Recession) அல்லது தேக்கநிலை (Stagflation) தள்ளப்படுவது குறித்துக் கேள்வி தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார். மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கடனைத் திறமையாக நிர்வகித்துள்ளது எனக் கூறினார்.

நிர்மலா சீதாராமன் பதிலுக்குத் தற்போது சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார்.

சுப்பிரமணியன் சாமி

இந்திய பொருளாதாரம் மந்தநிலை (Recession) அல்லது தேக்கநிலை (Stagflation) தள்ளப்படுவது குறித்துக் கேள்வியே இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது சரிதான். ஏன்னெறால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே பொருளாதாரம் மந்தநிலைக்குள் (Recession) சென்றுவிட்டது. எனவே மந்தநிலைக்குள் செல்லுமா என்ற கேள்வி எழாது எனச் சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜடிபி தரவுகள்

ஜடிபி தரவுகள்

சுப்பிரமணியன் சாமி டிவீட்டுக்கு அதுல் என்பவர், ஆனால் மத்திய அரசு இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அளவில் உள்ளதாகக் கூறுகிறது. இது போலியாக உருவாக்கப்பட்ட தரவுகளா அல்லது பணவீக்கத்தைச் சரியாக அட்ஜெஸ் செய்யப்படவில்லையா..? என்று கேட்டதற்குச் சுப்பிரமணியன் சாமி இரண்டும் தான் எனச் சிம்பிளாகப் பதில் அளித்துள்ளார்.

Amritkal காலம்
 

Amritkal காலம்

மேலும் ஒருவர் சாமி ஜி உங்க டிவீட் பக்தாள்களுக்குப் பிடிக்காது, அவர்களைப் பொருத்த வரையில் நாம் இப்போது #Amritkal காலத்தில் இருக்கிறோம் எனப் பரீக்ஷித் பதக் டிவீட் செய்துள்ளார். இதற்கும் சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

5 டிரில்லியன் டாலர் ஜிடிபி

5 டிரில்லியன் டாலர் ஜிடிபி

மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவில்லாதவர்கள் அல்லது போலியான கல்விச் சான்றிதழ்களைக் கொண்டவர்கள். 5 டிரில்லியன் டாலர் ஜிடிபி குறித்துச் செம்மறி ஆடுகளைப் போலத் துள்ளிக்குதித்த பின்பு, இப்போது மந்தநிலை இல்லை என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனச் சுப்பிரமணியன் சாமி, பரீக்ஷித் பதக் டிவீட்-க்குப் பதில் அளித்துள்ளார்.

ஜூலை தரவுகள்

ஜூலை தரவுகள்

உண்மையில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கு, ஜூலை மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் 28 சதவீதம் அதிகரித்து 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

உற்பத்தித் துறை PMI குறியீடு 53.9 புள்ளிகளிலிருந்து 56.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

இதேபோல் மின்சாரப் பயன்பாடு கடந்த ஆண்டை காட்டிலும் 2.9 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரையில் தத்தம் உயர்ந்துள்ளது.

இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கியக் காரணிகளாக இருந்தாலும் பணவீக்கம் என்ற ஒன்றை இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பது தான் அனைவரின் கவலையாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Subramanian Swamy says Nirmala Sitharaman is right; Indian economy already into recession last year

Subramanian Swamy says Nirmala Sitharaman is right; the Indian economy was already got into recession last year நிர்மலா சீதாராமன்-க்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணியன் சாமி..!

Story first published: Tuesday, August 2, 2022, 11:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.