வங்கியின் துப்புரவாளர் டூ AGM ஆக பதவி உயர்வு பெற்ற பிரதிக்ஷா.. பெண் குலத்திற்கே பெருமை!

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையின் எந்த எல்லைக்கும் பயணிக்கலாம் என்பதற்கு பிரதிக்ஷாவின் கதை ஒரு சிறந்த உதாரணம்.

ஏனெனில் வங்கியின் துப்புரவளராக பணிபுரிந்த ஒரு பெண், இன்று அதே வங்கியின் உதவி பொது மேலாளராக உயர்ந்திருப்பது அவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தான் பார்க்கப்படுகிறது.

ஆக நம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பிரதிக்ஷாவின் ஏற்றம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகவும் உள்ளது.

இந்திய அரசின் ஜிடிபி தரவுகள் போலியா..? சுப்பிரமணியன் சாமி டிவீட்.. நிர்மலா சீதாராமன்-க்கு பதிலடி!!

யார் இந்த பிரதிக்ஷா

யார் இந்த பிரதிக்ஷா

புனேவில் வசிக்கும் பிரதிக்ஷா டோண்ட்வால்கர், உதவி பொதுமேலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, வங்கியின் துப்புரவு பணியாளராகவும் இருந்தார். ஒருவர் தங்களது இலக்கினை அடைய விடாமுயற்சியும், உறுதியும் இருந்தாலே போதும் என்பதை பிரதிக்ஷாவின் கதை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி

கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி

1964ல் பிறந்த பிரதிக்ஷாவுக்கு இந்த வெற்றி என்பது பெரிய அதிசயம் அல்ல, ஏனெனில் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்தவருக்கு, அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. ஒருவரின் வெற்றிக்கு வறுமை என்றுமே தடையாய் இருக்காது என்பதற்கும் இது சிறந்த உதாரணம்.

கணவரின் இழப்பு
 

கணவரின் இழப்பு

பிரதிக்ஷா 17 வயதாக இருக்கும்போதே திருமணம் நடந்தது. அதன்பிறகு தனது 20 வயதில் கணவரை இழந்துள்ளார். அவருக்கு சரியான கல்வி தகுதி இல்லை என்பதால், நல்ல வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு குடும்பத்திற்காகவும், அவரது கல்வி படிப்பினை தொடரவும் எஸ்பிஐயில் துப்புரவு பணியாளராக தனது பணியினை தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து பதவி உயர்வு

தொடர்ந்து பதவி உயர்வு

தொடர்ந்து தனது விடாமுயற்சியால் பள்ளி கல்வி, பட்ட படிப்பினையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். அவரது முயற்சியின் பலனாக துப்புரவு பணியாளர் என்ற நிலையில் இருந்து கிளர்க்காகவும் பதவி உயர்த்தப்பட்டார். ஆனால் அத்துடன் தனது முயற்சியினை பிரதிக்ஷா விட்டு விடவில்லை. அதன் பின்னர் CGM ஆகவும், அதன் பின்னர் AGM ஆகவும் பதவி உயர்வு பெற்று, தொடர்ந்து உயர் பணிக்கு சென்றுள்ளார்.

இரவு கல்லூரி

இரவு கல்லூரி

பிரதிக்ஷாவின் சாதனைக்களுக்கு மத்தியில் அவரின் பணியினை பாராட்டி, எஸ்பிஐ அவரை கெளரவித்தது. சம்பதிக்கும் காலத்திலேயே மும்பை விக்ரோலியில் உள்ள இரவு கல்லூரியில் சேர்ந்துள்ளார். படிக்கும்போது மற்ற ஊழியர்களின் உதவியும் பெற்றுள்ளார். 1995ல் சைக்காலஜியில் இளங்கலை பட்டம் பெற்றால். அதன் பிறகு தான் வங்கி எழுத்தராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

பிரதிக்ஷா ஓய்வு பெற இன்னும் 2 வருடங்களே உள்ளன. எஸ்பிஐ-யில் அவரது பணி 37 வருடமாக தொடரும் நிலையில், இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. 2021ல் இயற்கை மருத்துவ திட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார். தனது ஓய்வுக்கு பிறகு தனது கல்வியினை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளராம்.

பெண்களின் பங்கு

பெண்களின் பங்கு

வங்கித் துறையில் பெண்கள் பணி புரிந்து வந்தாலும், உயர் பதவிகளில் ஆண்களின் பங்கே அதிகம். ஆக பிரதிக்ஷா போன்றோரினால் இன்று பல பெண்களும் உயர் பதவிக்கு தங்களது விடா முயற்சியால் முன்னேறி வருகின்றனர். இது பெண் சமுதாயத்திற்கு கிடைத்த பெருமை எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pratiksha, who was a sweeper in SBI, has been promoted as AGM after 37 years

Pratiksha, who was a sweeper in SBI, has been promoted as AGM after 37 years/வங்கியின் துப்புரவாளர் டூ AGM ஆக பதவி உயர்வு பெற்ற பிரதிக்ஷா.. பெண் குலத்திற்கே பெருமை!

Story first published: Tuesday, August 2, 2022, 12:33 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.