இந்திய பங்கு சந்தையில் சமீபத்திய காலமாக அதிகளவிலான ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. எனினும் இந்திய பங்கு சந்தையில் முதலீட்டு ரீதியாக நல்ல வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்திய பங்கு சந்தையில் நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பினை கொடுத்து வருகின்றன. கடந்த 1992ல் ஹர்ஷத் மேத்தா நெருக்கடியாக இருந்தாலும், 1995 – 96ல் தென் கிழக்கு ஆசிய நெருக்கடியாக இருந்தாலும், 2000 சரிவும், 2008ல் உலகளாவிய நிதி நெருக்கடியாக இருந்தாலும், 2013ல் டேபர் டான்ட்ரம் ஆக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் இருந்தன என மார்கெட் மோஜோவின் தலைமை செயல் அதிகாரி மோஹித் பத்ரா தெரிவித்துள்ளார்.
வேற லெவலில் இந்திய விளம்பர சந்தை… ரூ. 88,639 கோடி வருமானம்!
சென்செக்ஸ் & நிஃப்டி இலக்கு
ET-க்கு அளித்த பேட்டியில் பத்ரா, இந்திய பங்கு சந்தையில் திருத்தங்கள் இருந்து வரும் போதிலும், பங்கு சந்தை முன்னோக்கி செல்வதற்காக வாய்ப்பும் உள்ளது. 2027ல் சென்செக்ஸ் 1.25 லட்சங்களையும், நிஃப்டி 37,000 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என பத்ரா தெரிவித்துள்ளார்.
வெளியேறி வரும் அன்னிய முதலீடு
கடந்த அக்டோபர் 2021ல் இருந்து சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது. ஏப்ரல் 2020ல் இருந்து இந்திய சந்தையானது நல்ல லாபம் கொடுத்துள்ள சந்தைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது.
பணவீக்கம்
சர்வதேச சந்தையில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில், பாதிப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் நிலை இன்னும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கச்சா எண்ணெய் விலையை உந்தலாம். இது மேற்கோண்டு பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம்.
இனியும் சரியலாம்
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சந்தையில் தாக்கம் இருந்து வருகின்றது. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இன்னும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாயின் மதிப்பு ஏற்கனவே 80 ரூபாய் வரையில் சரிவில் உள்ள நிலையில், இது மேற்கோண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் எதிரொலி
பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை, உலோகங்களின் விலை என பலவும் பணவீக்கத்தினை தூண்டலாம். ஏற்கனவே மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் 1 அல்லது 2 முறை அதிகரிக்கலாம். இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவும்.
ஏற்றம் காணலாம்
மேற்கண்டவற்றின் விலை குறையும்போது அதன் பலன் இந்தியாவுக்கு அதிகம் கிடைக்கும் எனலாம். மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியா கமாடிட்டிகள் , கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றது. ஆக இதுவும் பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம். ஆக இந்திய சந்தையானது மீண்டும் நல்ல வளர்ச்சி காணலாம். இது மீடியம் டெர்மில் நல்ல ஏற்றம் காணலாம்.
sensex to hit 1,25,000 by April 2027: nifty may hit 37,000: Mohit batra
sensex to hit 1,25,000 by april 2027: nifty may hit 37,000: mohit batra/சென்செக்ஸ் 1,25,000 தொடலாம்.. நிஃப்டி 37,000 இலக்கு.. ஏன்.. நிபுணர்களின் பலே கணிப்பு!