சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் நான்சி பெலோசி செல்லும் நிலையில், தைவானுக்கு கிழக்கே நான்கு போர்க்கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. நான்சி பெலோசி தற்போது மலேசியாவில் உள்ள நிலையில், அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு நான்சி செல்ல உள்ளதாக அமெரிக்கா, தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
சீனாவின் தீவிர எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி செவ்வாய்கிழமை தைவான் செல்ல உள்ள நிலையில், ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட நான்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவானின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டன. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், தென் சீனக் கடலைக் கடந்து தற்போது பிலிப்பைன்ஸ் கடலில், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு கிழக்கே மற்றும் ஜப்பானுக்கு தெற்கே நிலைநிறுத்தப்பட்டது என்று அமெரிக்க கடற்படை அதிகாரி செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினார்.
மேலும் படிக்க | நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா
நான்சி பெலோசியின் வருகைக்கு முன்னதாக தைவான் ஜலசந்தியின் இருபுறமும் இராணுவ நடவடிக்கையின் அறிகுறிகள் வெளிப்படுவதால், போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு செல்வது தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது போன்றது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை அன்று தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீப நாட்களில், தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது தொடர்பாக சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் ராணுவ ரீதியாக வலுப்பெறுவதை விரும்பாத சீனா, சுமார் $108 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி
மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ