புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO 9T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன தேச ஸ்மார்ட்போன் நிறுவனமான iQoo நிறுவனத்தின் லேட்டஸ்ட் வரவாக வெளிவந்துள்ளது iQOO 9T. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 4-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விற்பனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் iQOO 9 சீரிஸ் போன்களுக்கு பயனர்கள் மத்தியில் உள்ள அதே வரவேற்பு 9T மாடலுக்கும் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் iQOO நிறுவன சிஇஓ நிபுண் மர்யா. இந்த போனின் உயர்ந்த செயல்திறன் கொண்ட அம்சங்கள் பயனர்கள் விரும்பும் வகையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன். 120Hz ரெப்ரெஷ் ரேட், 1080×2400 பிக்சல் ரெசல்யூஷன் போன்ற சப்போர்ட் இந்த போனின் டிஸ்ப்ளேவில் உள்ளது.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் வசதியும் இதில் உள்ளது.
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC சிப்செட் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.
- 4700mAh பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. 120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதியும் பெற்றுள்ளது.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
- 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது.
- 8ஜிபி வேரியண்ட் விலை ரூ.49,999. 12ஜிபி வேரியண்ட் விலை ரூ.54,999. இதன் விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெறும் 20 நிமிடத்தில் 100 சதவீதம் இதன் பேட்டரி திறனை சார்ஜ் செய்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
With more light in and excellent photosensitivity, the new #iQOO9T is equipped with 50MP GN5 Ultra-Sensing Camera.
Watch Now: https://t.co/ugWTiUDlKM
Buy Now: https://t.co/nFC5ENODfx#iQOO9T #MonsterInside #iQOO9Series #AmazonSpecials pic.twitter.com/JFoa32Jrgo— iQOO India (@IqooInd) August 2, 2022