மோடி பக்தர்களுக்கு படிப்பறிவு இல்லை?; பரபரப்பை பற்ற வைத்த பாஜக தலைவர்!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணிய சாமி. தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணிய சாமி பல்வேறு விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

அதிலும் பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை கிழித்து தொங்கப்போடுவது சுப்பிரமணிய சாமிக்கு கை வந்த கலை. ஆனாலும் பாஜக மேலிடம் அது குறித்து எவ்விதமான கருத்தையும் வெளிப்படுத்தாது.

அதே சமயம், சுப்பிரமணிய சாமி கூறும் கருத்து கட்சிக்கு பாதகமாக இருக்கும் பட்சத்தில் அது, ‘சுப்பிரமணிய சாமியின் சொந்த கருத்து. கட்சியின் கருத்துகள் இல்லை’ என பாஜக தடாலடியாக அறிவித்துவிடும்.

அந்தளவுக்கு கட்சி தலைமையே நடவடிக்கை எடுக்க யோசிக்கும் அளவுக்கு சுப்பிரமணிய சாமி தனக்கே உரிய ஸ்டைலில் அரசியல் செய்து வருவது பாஜகவுக்கு தலைவலி தரும் செயல் என்று கூட சொல்ல முடியும்.

அந்தவகையில், சமீபகாலமாக சுப்பிரமணிய சாமி ஒன்றிய அரசு குறித்து பல்வேறு விமர்சனத்தை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக இந்திய பொருளாதாரம், இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்தும் அவர் பகிரங்கமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த விமர்சனத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விட்டு வைக்காமல், அவர்களை வெளிப்படையாகவே விமர்சிப்பதை சுப்பிரமணிய சாமி வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணிய சாமி ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். அதுகுறித்த விபரம் வருமாறு:

சசிகலா, டிடிவி வந்தால் வரவேற்போம்; அதிமுக அறிவிப்பால் அதிரடி திருப்பம்!

அதாவது நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய பொருளாதாரம், விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நிர்மலா சீதாரமன் பேசினார். அப்போது, ‘உலகிலேயே இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது.

கொரோனா நோய் பரவல், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும், 7 சதவீதத்தில் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தி உள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிடு இருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது.

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதாரம் மீண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலையோ அல்லது தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடம் இல்லை’ என்றார்.

முதல்வர் ஸ்டாலின் போன் கால்; வெளவெளத்து போன கமிஷனர்!

இதை கண்டித்து, திமுக உள்பட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, நிர்மலா சீதாராமனின் விளக்கத்தை சுப்பிரமணிய சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணிய சாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அவர் சொல்வது சரி தான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து விட்டது. அதனால் தான் தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லலை என தெரிவித்துள்ளார்.

இந்த டிவிட்டர் பதிவை தொடர்ந்து பரிக்சித் பதாக் என்பவர், ‘சாமி ஜி… பக்தர்கள் உங்களது டிவிட்டர் பதிவை விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய கூற்றுப்படி நாம் அனைவரும் நல்ல காலத்தில் இருக்கிறோம்.

இதற்கு சுப்பிரமணிய சாமி, ‘மோடி பக்தர்கள் இயல்பிலேயே படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது போலியான கல்வி சான்றிதழ்களை கொண்டவர்கள். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என, கூறியவர்கள் தற்போது பொருளாதார மந்தநிலை இல்லை, என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என பதில் அளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியின் இந்த பதிவு, மத்திய அரசு வட்டாரங்களை அதிலும் குறிப்பாக, கட்சி மேலிடத்தை கதிகலங்க செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார் என, அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சுப்பிரமணிய சாமியின் இந்த கருத்து கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.