புளோரிடாவின் கடல் ஆமைகள் மோசமான காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. கடற்பரப்பில் அதிக வெப்பம் நிலவுகிறது. வெப்ப அலைகளால் மணல் சூடாகின்றன. இதனால் ஆமை பிறப்பில் ஆண், பெண் விகிதத்தில் சமன் இல்லாமல் பிறக்கும் பெரும்பாலான ஆமைகள் பெண்களாக உள்ளன என ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆமை மருத்துவமனையின் மேலாளர் பெட் சிர்கெல்பாக் கூறுகையில்,” புளோரிடாவில் கடந்த 4 ஆண்டுகளாக மோசனமான வெப்பம் நிலவுகிறது. கடல் ஆமை குஞ்சுகள் மற்றும் முட்டைகளை ஆய்வு செய்யும் போது, பெரும்பாலும் பெண் ஆமைகளே இருந்துள்ளன. ஆண் ஆமைகள் இல்லை” என்றார். 1986 முதல் ஆமை மையத்தை நடத்தி வருகிறார்.
பெண் ஆமை கடற்கரையில் மணல் தோண்டி முட்டை இடுகிறது. மணலின் வெப்பநிலை குஞ்சுகளின் பாலினத்தை தீர்மானிக்கிறது. ஆஸ்திரேலிய ஆய்வு தரவுகளும் இதுபோன்ற புள்ளிவிவரங்களையே காட்டுகிறது. புதிய ஆமை குஞ்சுகளில் 99% பெண்களே இருந்துள்ளன. கருத்தரிப்பின் போது பாலினத்தை தீர்மானிப்பதற்கு பதிலாக, கடல் ஆமைகள் மற்றும் முதலைகள் வெப்பநிலையைப் பொறுத்து முட்டையின் பாலினம் தீர்மானிக்கப்படுகிறது” என தேசிய கடல்சார் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.
ஆமை முட்டைகள் 81.86 ஃபாரன்ஹீட் (27.7 செல்சியஸ்)க்குக் கீழ் அடைகாத்தால், ஆமை குஞ்சுகள் ஆணாக இருக்கும், அதேசமயம் 88.8 F (31C) க்கு மேல் அடைகாத்தால் அவை பெண்களாக இருக்கும் என்று என்ஓஏஏ தெரிவத்துள்ளது.
மியாமி உயிரியல் பூங்காவில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஆமை மையத்தின் கடல் ஆமை பராமரிப்பாளரான மெலிசா ரோசல்ஸ் ரோட்ரிக்ஸ் கூறுகையில், “சில ஆண்டுகளாக, ஆமை இனப்பெருக்கத்தில் கூர்மையான சரிவு காணப்படுகிறது. ஆண்-பெண் விகிதத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றார்.
ஆமைகள் FP என்று அழைக்கப்படும் ஃபைப்ரோபாப்பிலோமாடோசிஸ் ஆமை கட்டிகளால் பாதிக்கப்படுகிறது. ஆமை மையங்களில் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கட்டிகள் மற்ற ஆமைகளுக்குத் தொற்றக்கூடியவை மற்றும் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.